டெல்லி விமானத்தில் அதிர்ச்சி.! குடி போதையில் பணிப்பெண்ணிடம் தகராறு.! 2 பேர் கைது.!

Default Image

டெல்லி விமானத்தில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட இருவரை விமானத்துறை போலீசார் கைது செய்தனர்.  

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு டெல்லியில் இருந்து பாட்னாவுக்கு சென்ற இண்டிகோ விமானத்தில் பீகாரைச் சேர்ந்த இரண்டு பயணிகள் குடிபோதையில் பயனித்துள்ளனர்.

அவர்கள் விமானத்தில் பயணத்தின் போது விமான பணிப்பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. மேலும் பாலியல் ரீதியாக தாக்கப்பட்டதாகவும் தெரிகிறது.

இதனை அடுத்து, பயணிகளை சமாதானப்படுத்த முயன்ற விமான கேப்டனையும் அவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.  விமானத்தின் கேப்டன் கொடுத்த புகாரின் பெயரில், விமானத்தில் இருந்து இறங்கி வெளியேற முற்பட்டவர்களை விமான நிலைய காவல் அதிகாரிகள் இடை மறித்து அவர்களை கைது செய்துள்ளனர்.

மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட இருவரரும் பீகார் பிரதான அரசியல் கட்சியினர் தொடர்பில் இருப்பவர்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்