இந்தியன் ஆயில் நிறுவனம், விமான எரிபொருளின் விலையை 23 விழுக்காடு குறைத்துள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில், 37 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இந்தியாவில் அனைத்து போக்குவரத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்ட நிலையில், கொரோனா பரவலை தடுக்கும் வண்ணம், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான போக்குவரத்து சேவைகளும் தடைசெய்யப்பட்டுள்ளது. இதனால், கடந்த ஒன்றரை மாத காலமாக விமான எரிபொருளின் பயன்பாடும், தேவையும் 90 விழுக்காட்டுக்கும் மேல் குறைந்துள்ளது.
இந்நிலையில், இந்தியன் ஆயில் நிறுவனம், விமான எரிபொருளின் விலையை 23 விழுக்காடு குறைத்துள்ளது. அதாவது 1000 லிட்டர் எரிபொருள் விலையில் 6,812 ரூபாய் குறைத்துள்ளது. டெல்லியில் ஆயிரம் லிட்டர் விமான எரிபொருள் 22,544 ரூபாயாகவும், மும்பையில் 22,109 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 27,804 ரூபாயாகவும், சென்னையில் 23, 414 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு வந்துள்ளது குறிப்பிடதக்கது.
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…
தூத்துக்குடி : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
சென்னை : இன்று பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழிப்பு தினம் சர்வதேச அளவில் கடைபிடிக்கப்படுகிறது. இன்றைய தினத்தில் பெண்கள் பாதுகாப்பு…