உத்தரகண்ட் மாநிலத்தின் சாமோலி மாவட்டத்தில் ரிஷி கங்கா நதியில் உள்ள ரிஷிகங்கா மின் திட்டத்திற்கு அருகே ஏற்பட்ட பனிச்சரிவைத் தொடர்ந்து அதிக அளவில் தண்ணீர் வந்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், ஆற்றின் கரையோரம் அமைந்திருந்த வீடுகளுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மாநில பேரிடர் மேலாண்மைத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், மீட்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் உள்ளன.
சாமோலியில் ஏற்பட்ட பனிச்சரிவைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கையாக ஹரித்வார் உள்ளிட்ட பல மாவட்டங்களில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், அலக்நந்தா ஆற்றின் கரையில் வசிக்கும் மக்கள் விரைவில் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
உத்தரகண்ட் முதல்வர் டி.எஸ்.ராவத் வதந்திகளைத் தவிர்க்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். சாமோலி மாவட்டத்தில் ஏற்பட்ட சம்பவத்தை சமாளிக்க மாவட்ட நிர்வாகம், காவல் துறை மற்றும் பேரிடர் மேலாண்மைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எந்த வதந்திகளையும் நம்பவேண்டாம். தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது என தெரிவித்துள்ளார்.
சமோலியில் வெள்ளத்தில் சிக்கி 150 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி வருகிறது. இந்நிலையில், உத்தரகாண்டில் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் சிக்கியவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்பு குழு விரைந்துள்ளது. அனைத்து உதவிகளையும் மத்திய அரசு மேற்கொள்ளும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
டெல்லி : வக்பு வாரியம் என்பது இஸ்லாமிய மக்களால் தானமாக வழங்கப்பட்ட சொத்துக்களை நிர்வகிக்கும் ஒரு இஸ்லாமிய அமைப்பு ஆகும்.…
சென்னை : எம்.ஜி.ஆர் - சிவாஜி காலத்தில் இருந்து சினிமாவில் பாட துவங்கி, தற்போது அஜித் - விஜயை தொடர்ந்து…
ஆப்கானிஸ்தான் : அணியில் பந்துவீச்சில் தூண் என்றால் லெக்-ஸ்பின்னர் ரஷித் கான் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு அணியின் வளர்ச்சிக்கு…
சென்னை : மும்மொழிக் கொள்கை விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் "பெரியார், அண்ணா, கலைஞர்…
சென்னை : தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூரில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிர் மாய்ந்த திருமலர், திருமஞ்சு, செண்பகம் ஆகியோரின்…
சென்னை : ஒவ்வொரு நடிகருக்கும் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத மிகப்பெரிய ஹிட் படங்களாக ஒரு படம் இருக்கும் என்பது…