குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதே பள்ளிகளை திறப்பதற்கு வழி – எய்ம்ஸ் தலைவர்..!

Published by
Sharmi

குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதே பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கு வழி வகுக்கும் என்று எய்ம்ஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.

எய்ம்ஸ் தலைவர் டாக்டர் ரன்தீப் குலேரியா, குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது தான் பள்ளிக்கூடங்கள் திறப்பதற்கும், குழந்தைகளின் வெளிப்புற நடவடிக்கைகளுக்கும் வழியாகும் என்று தெரிவித்துள்ளார். குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது என்பது ஒரு மைல்கல் சாதனையாகும். 2 முதல் 18 வயதுடைய குழந்தைகளுக்கு பாரத் பையோடெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியான கோவாக்ஸின் தடுப்பூசியின் இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட சோதனை முடிவுகள் செப்டம்பர் மாதம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதனை தொடர்ந்து மருந்து கட்டுப்பாட்டாளரின் ஒப்புதலின் பின் குழந்தைகளுக்கு இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்துவது ஆரம்பம் ஆகும் என்று கூறியுள்ளார். ஒருவேளை இதற்கு முன்னர் அமெரிக்காவின் பைசர் தடுப்பூசிக்கு இந்தியாவில் ஒப்புதல் கிடைத்தால் இது குழந்தைகளுக்கு செலுத்த வாய்ப்பு உள்ளது என்று அவர் சனிக்கிழமையன்று கூறியுள்ளார். மேலும், மூத்த அரசாங்க அதிகாரி ஒருவர் தற்போது சைடஸ் காடிலா என்ற மருந்து நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியான சைக்கோவ்-டி அவசர கால ஒப்புதலுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனெரலுக்கு விண்ணப்பம் செய்ய வாய்ப்பிருப்பதாகவும், இந்த தடுப்பூசி குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கானது என்றும் கூறியுள்ளார்.

இது குறித்து எய்ம்ஸ் தலைவர், இந்த சைகோவிக்-டி மருந்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால் இதுவும் குழந்தைகளுக்கு கிடைக்க வாய்ப்பிருக்கும் என்று கூறியுள்ளார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குழந்தைகளுக்கு கல்வி வழங்குவதில் பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், இதை சரி செய்ய கொரோனா தடுப்பூசி செலுத்துவது ஒன்றே வழி என தெரிவித்துள்ளார்.

மேலும் என்ஐடிஐ ஆயோக் உறுப்பினர் டாக்டர் பால் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதை குறித்து தெரிவித்துள்ளதாவது, நம் நாட்டில் 2 முதல் 18 வயதுடையவர்கள் கிட்டத்தட்ட 13 முதல் 14 கோடி பேர் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதனால் நமக்கு 25 முதல் 26 கோடி டோஸ் தடுப்பூசி தேவைப்படும் என்றும் கூறியுள்ளார். இதனால் கோவாக்ஸின் மட்டுமல்லாது சைக்கோவ்-டி தடுப்பூசியும் ஒப்புதலுக்கு பிறகு குழந்தைகளுக்கு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Recent Posts

“இந்த படம் எனக்கு ஸ்பெஷல்”…லப்பர் பந்து பார்த்துவிட்டு அஸ்வின் சொன்ன விமர்சனம்!

“இந்த படம் எனக்கு ஸ்பெஷல்”…லப்பர் பந்து பார்த்துவிட்டு அஸ்வின் சொன்ன விமர்சனம்!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பீன் ஜாம்பவான் அஸ்வின் போட்டிகளில் விளையாடிக் கொண்டிருப்பது ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு…

7 mins ago

பாலியல் வழக்கு: நடிகர் சித்திக்கின் முன்ஜாமீன் மனுவை நிராகரித்த கேரள உயர்நீதிமன்றம்.!

கொச்சி : திருவனந்தபுரத்தில் உள்ள அருங்காட்சியக போலீஸார், நடிகை ஒருவரின் புகாரின் பேரில், மலையாள நடிகர் சித்திக் மீது, பாலியல்…

38 mins ago

மணிமேகலை விஷயத்தில் கதறி அழுத பிரியங்கா! உண்மையை உடைத்த வனிதா!

சென்னை : மணிமேகலை விஷயத்தில் பிரியங்காவுக்கு எதிராக அவருடைய குணத்தை மட்டம் தட்டும் அளவுக்கு விமர்சனங்கள் எழுந்தது என்றே கூறலாம்.…

1 hour ago

உதயநிதிக்கு கிரீன் சிக்னல்.? “ஏமாற்றம் இருக்காது” மு.க.ஸ்டாலின் ‘பளீச்’ பதில்.!

சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதியில் பல்வேறு மக்கள் நல திட்டங்களை…

1 hour ago

INDvsBAN : 2-வது டெஸ்ட் போட்டியில் மழைக்கு வாய்ப்பா? வானிலை அறிக்கை கூறுவது என்ன?

கான்பூர் : கடந்த செப்.19 தேதி முதல் 4 நாட்களாக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில்…

1 hour ago

மெய்யழகனுக்கு U சான்றிதழ்… போர் அடிக்காமல் காப்பாத்துவாரா இயக்குனர்.?

சென்னை : நடிகர்கள் கார்த்தி, அரவிந்த் சாமி மற்றும் ஸ்ரீ திவ்யா உள்ளிட்டோர் நடித்துள்ள மெய்யழகன் திரைப்படம் வரும் செப்டம்பர்…

2 hours ago