போராட்டத்தில் விவசாயி எப்படி இறந்தார்..? வெளியான அதிர்ச்சி தகவல்..!
farmers protest: கடந்த பிப்ரவரி 13-ம் தேதி முதல் அனைத்து பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் மற்றும் பிற கோரிக்கை முன்வைத்து டெல்லி நோக்கி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் 4கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என விவசாயிகள் தலைவர் சர்வான் சிங் பாந்தர் தெரிவித்துள்ளார்.
READ MORE- டெல்லியில் குவிந்த பாஜக தலைவர்கள்.. விரைவில் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு.!
கடந்த வாரம் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயி ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது விவசாயிகள் ஹரியானா எல்லையில் உள்ள பஞ்சாபின் கானௌரி மற்றும் ஷம்பு எல்லைகளில் விவசாயிகள் முகாமிட்டுள்ளனர். தனது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து நேற்று பிப்ரவரி 29 ஆம் தேதி அறிவிப்பதாக விவசாயிகள் தலைவர் சர்வான் சிங் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், விவசாயிகளின் டெல்லி சலோ ஊர்வலத்தின் போது கடந்த வாரம் கானௌரி எல்லையில் ஹரியானா காவல்துறையினருடன் ஏற்பட்ட மோதலின் போது விவசாயி சுபாகரன் சிங் இறந்தார். இந்த வழக்கில் பஞ்சாப் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர். சுபாகரன் சிங்கின் பிரேதப் பரிசோதனையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
READ MORE- 300 யூனிட் மின்சாரம் இலவசம்..! சூரிய மின்சக்தி திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
அதன்படி நேற்று முன்தினம் (பிப்ரவரி 28) நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் போராட்டத்தில் ஈடுபட்ட இளம் விவசாயி சுப்கரன் சிங் ரப்பர் குண்டு தலையில் தாக்கி காயம் ஏற்பட்டு இறந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரின் மண்டை ஓட்டின் பின்புறத்தில் காயம் ஏற்பட்டதும், அவரது உடலில் வேறு எந்தப் பகுதியிலும் காயங்கள் இல்லை என்பதும் பரிசோதனையில் தெரியவந்தது.
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளும் அவரது குடும்பத்தினரும் அவரின் உடலை அடக்கம் செய்ய மறுப்பு தெரிவித்தனர். சுப்கரன் சிங் மரணத்திற்கு காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
பின்னர் உயிரிழந்த விவசாயி தந்தை அளித்த புகாரின் பெயரில் அடையாளம் தெரியாத நபர் மீது கொலை வழக்கு உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சுபாகரன் சிங் உடல் நேற்று (பிப்ரவரி 29) தகனம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.