கேரளாவில் நாளை முதல் பேருந்து, ஆட்டோ டாக்சி கட்டணம் உயர்த்தப்படுகிறது.
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை அடுத்து, பேருந்து, ஆட்டோ, டாக்சி கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று கேரளாவைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இதற்கான கட்டணம் உயர்த்தப்படும் என்று சமீபத்தில் கேரள அரசு அறிவித்திருந்தது. அதன்படி, பேருந்து, ஆட்டோ டாக்சி கட்டணம் உயர்வு நாளை முதல் அமலுக்கு வருவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கேரள மாநில போக்குவரத்து துறை நடத்திய ஆலோசனையில், அரசு பேருந்தில் குறைந்த பட்ச கட்டணத்தை ரூ.10-ல் இருந்து ரூ.12-ஆகவும், விரைவு பேருந்துகளில் குறைந்த பட்ச கட்டணத்தை ரூ.14-ல் இருந்து ரூ.15-ஆகவும், அதிவிரைவு பேருந்துகளில் குறைந்த பட்ச கட்டணத்தை ரூ.20-ல் இருந்து ரூ.22 ஆக உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது. இதுபோன்று, 1.5 கி.மீட்டருக்கான ஆட்டோ கட்டணம் ரூ.25ல் இருந்து ரூ.30 ஆகவும், 5 கிலோ மீட்டர் வரையில், கூடுதல் கிலோமீட்டருக்கு ரூ.12ல் இருந்து ரூ.15 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
அதற்குமேல், ஒவ்வொரு கூடுதல் கிலோமீட்டருக்கும் கட்டணம் ரூ.15ல் இருந்து ரூ.18 ஆக உயர்த்தப்படும் என கூறப்பட்டுள்ளது. 1500 சிசிக்கு மேல் உள்ள வாகனங்களுக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.200ல் இருந்து ரூ.225 ஆக உயர்த்தப்படுகிறது. கூடுதல் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் கட்டணம் ரூ.17ல் இருந்து ரூ.20 ஆக உயர்த்தப்படுவதாக தகவல் வெளியாகியிருந்தது. மேலும், ஆட்டோ, டாக்சி கட்டண உயர்வுக்கு கேரள அமைச்சரவை ஒப்புதல் அளிக்க முடிவு செய்யப்பட்ட நிலையில், நாளை முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்வோர் ரயில், பேருந்துகளில் டிக்கெட் கிடைக்காமல் அவதியுறுவதுண்டு. அவர்கள், அரசுப்பேருந்துகளில்…
சென்னை : கடந்த நவ-14 அன்று 3D தொழில்நுட்பத்தில் பெரும் பொருட்செலவில் உருவான கங்குவா திரைப்படமானது தமிழ், மலையாளம், இந்தி,…
ரியோ டி ஜெனிரோ : 19-வது ஜி20 உச்சி மாநாடானது இன்று பிரேசில் தலைநகரான ரியோ டி ஜெனிரோவில் தொடங்குகிறது.…
சென்னை : மணிப்பூரில் ஏற்பட்ட கலவரத்தில் பலி எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே 5…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், காலை 10 மணி வரை டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதுதான் உலகமே எதிர்பார்த்துக்…