டெல்லியில் ஆக்ஸிஜன் பொறுத்ததுப்பட்ட ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்…
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையை எளிதில் அடைய உதவும் வகையில் புதிய ஏற்பாடு….
டெல்லியில் கொரோன தொற்று அதிகரித்து வரும் நிலையில், ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் அவர்களால் டி.ஒய்.சி.யே அறக்கட்டளையுடன் இணைந்து ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கிவைத்துள்ளார், இந்த மாற்றியமைக்கப்பட்ட ஆட்டோக்கள் 85 முதல் 90 வரை ஆக்ஸிஜன் அளவைக் கொண்ட நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் மருத்துவமனைகளை அடைய உதவும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ளது, தற்போது 10 மாற்றியமைக்கப்பட்ட மூன்றுசக்கர வண்டிகள் மட்டுமே டெல்லியில் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
இதன் மூலம் ஆக்ஸிஜன் ஆதரவு தேவைப்படும் லேசான அறிகுறிகளைக் கொண்ட கொரோனா வைரஸ் நோயாளிகள் வேகமாக மருத்துவமனையை அடைவதற்கு இந்த ஆட்டோ ஆம்புலன்ஸ்களைத் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் இந்த ஆட்டோ ஆம்புலன்ஸில் ஆக்ஸிஜன் சிலின்டர் மற்றும் கிருமி நாசினி பொறுத்தப்பட்டுள்ளது மேலும் பிபிஇ உடை அணியப்பட்ட ஓட்டுனர்கள் ஆம்புலன்ஸை இயக்குவார்கள்.
மேலும் ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவைகளை 9818430043 மற்றும் 011-41236614 ஆகிய இரண்டு எண்கள் மூலம் முன்பதிவு செய்யலாம். இதுபோன்ற மேலும் 20 ஆட்டோ ஆம்புலன்ஸ்களை தேசிய தலைநகரங்களின் சாலைகளில் கொண்டு வர திட்டங்கள் உள்ளது என தெறிவிக்கப்பட்டுள்ளது.