ஆன்லைன் வகுப்புகளை நடத்த அங்கீகாரம் பெற அக்டோபர் 15 வரை விண்ணப்பிக்கலாம் என்று பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது.
தொலைதூரக் கல்வி வகுப்புகள் மற்றும் ஆன்லைன் வகுப்புகளை உயர் கல்வி நிறுவனங்கள் தொடங்குவது குறித்து கடந்த 4-ம் தேதி யுஜிசி சார்பில் அறிவிப்பு வெளியானது. அதன்படி, ஜனவரி 2021-ம் ஆண்டுக்கான படிப்புகளை உயர் கல்வி நிறுவனங்கள் தொடங்கலாம். ஆனால், முன்னதாக பல்கலைக்கழக மானியக் குழுவிடம் (யுஜிசி) இருந்து அங்கீகாரம் பெற வேண்டியது அவசியம் என்று கூறியுள்ளது.
இந்நிலையில், ஆன்லைன் வகுப்புகளை நடத்த அங்கீகாரம் பெற அக்டோபர் 15 வரை விண்ணப்பிக்கலாம் என்று பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2020-21 ஆம் கல்வியாண்டில் தொலைதூரக் கல்வி மற்றும் ஆன்லைன் கல்வி ஆகியவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்ட உயர் கல்வி நிறுவனங்களும், யுஜிசியின் விதிமுறைகளின்படி தகுதி வாய்ந்த நிறுவனங்களும் அங்கீகாரம் கோரி விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை அக்.31 வரை நடைபெறும் என யூஜிசி உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. +2 மறுதேர்வு முடிவுகள் அக். 10க்குள் வெளியிடப்படும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. அக்.10 +2 தேர்வு முடிவுகள் வரை கல்லூரி மாணவர்கள் சேர்க்கையை நீட்டிக்க கோரிய வழக்கில் சிபிஎஸ்இ, யுஜிசி உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…