கொரோனா பாதிப்பை 5 சதவீதமாக குறைக்க அதிகாரிகள் அக்கறையுடன் செயல்பட வேண்டும் – முதல்வர் எடியூரப்பா!
- கொரோனா பாதிப்பை 5 சதவீதமாக குறைக்க வேண்டும்.
- கொரோனா பாதிப்பு விகிதத்தை குறைக்க அதிகாரிகள் அக்கறையுடன் செயல்பட வேண்டும் என முதல்வர் எடியூரப்பா கோரிக்கை.
கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட 8 மாவட்டங்களில் உள்ள ஆட்சியருடன் கர்நாடக முதல்வர் எடியூரப்பா அவர்கள் நேற்று பெங்களூரிலிருந்து இணையம் வழியாக வியாழக்கிழமை ஆலோசனை கூட்டம் நடத்தினர். அப்போது பேசிய அவர், மாநில அளவில் கொரோனா பரவல் குறைந்து இருந்தாலும், ஒரு சில மாவட்டங்களில் குறையாமல் இருப்பது கவலை அளிப்பதாக கூறியுள்ளார்.
பெலகாவி, சிக்கமகளூரு, தென்கன்னடம், ஹாசன், மைசூரு, மண்டியா, சிவமொக்கா, தும்கூரு உள்ளிட்ட சில மாவட்டங்களில் கொரோனா தொற்று இன்னும் குறையாமல் இருப்பதற்கான காரணத்தை கண்டறிந்து பொது முடக்கத்தை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், மாநிலம் முழுவதும் ஜூன் 14ம் தேதி வரை போது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இது நீட்டிப்பதா, தளர்வுகள் அமல்படுத்தப்படுமா என்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
மாநிலத்தில் உள்ள சில பகுதிகளில் கொரோனா தொற்று அதிகமாகி உள்ளது பதற்றத்தை அதிகரித்துள்ளதாவும், தற்போது கர்நாடகாவில் 65 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா பாதிப்பு விகிதத்தை 5 சதவீதமாக குறைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.