ரத்தன் டாடாவிற்கு, ஆஸ்திரேலிய நாட்டின் உயரிய கெளரவம்.!

Default Image

இந்திய தொழிலதிபர் ரத்தன் டாடாவிற்கு, அவரது புகழ்பெற்ற சேவைக்காக ஆஸ்திரேலிய நாட்டின் உயரிய கெளரவம் வழங்கப்பட்டுள்ளது.

டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா, 2022 ஆம் ஆண்டு நிலவரப்படி, 1 பில்லியன் டாலருக்கும் அதிகமான நிகர மதிப்பைக் கொண்டு, உலகளவில் பணக்கார தொழில்முனைவோர்களில் ஒருவராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

ரத்தன் டாட்டாவிற்கு ஆஸ்திரேலிய நாட்டின் உயரிய கெளரவம் வழங்கி ஆஸ்திரேலியா சிறப்பித்துள்ளது. ஆஸ்திரேலிய-இந்தியா இருதரப்பு உறவுக்கு டாடாவின் சிறந்த பங்களிப்புகளுக்காக ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியாவின் (ஏஓ) பொதுப் பிரிவில் கெளரவ அதிகாரியாக ரத்தன் டாடா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய உயர் அதிகாரி, பாரி ஓ’ஃபாரெலின் பரிந்துரையை அடுத்து, ஆஸ்திரேலியாவின் கவர்னர் ஜெனரல் இந்த அறிவிப்பை வெளியிட்டார். ஆஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வணிக உறவை மேம்படுத்துவதிலும் வலுப்படுத்துவதிலும் ரத்தன் டாடாவின் பங்கு முக்கியத்துவமாகக் கருதப்படுகிறது.

1998 ஆம் ஆண்டு முதல் ஆஸ்திரேலியாவில் இயங்கி வரும், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் இல், எந்த இந்திய நிறுவனத்திலும் இல்லாத மிகப்பெரிய அளவில் ஆஸ்திரேலிய பணியாளர்கள் பணிபுரிகின்றனர். சுமார் 17,000 ஊழியர்கள் இதில் பணிபுரிவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரத்தன் டாட்டாவின் நீண்டகாலம் சிறப்பாக  பங்காற்றியதற்காக, ஆஸ்திரேலியாவின் மிக உயரிய கவுரவமான ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியாவின் கெளரவ அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதனை பாரி ஓ’ஃபாரெல் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்