ஆகஸ்ட் மாதத்தில் 18 நாட்கள் வங்கி விடுமுறை!!
ஜூலையில் 14 வங்கி விடுமுறைகள் இருந்த நிலையில், ஆகஸ்டில் 18 வங்கி விடுமுறைகள் உள்ளன. ஆகஸ்ட் மாதம் இன்னும் சில நாட்களில் தொடங்கப் போகிறது.
இந்திய ரிசர்வ் வங்கி தயாரித்த நாட்காட்டியின்படி ஆகஸ்ட் மாதத்தில் புதிய வங்கி விடுமுறைகள் அமலுக்கு வருகிறது. அவற்றில் ஆறு வார இறுதி விடுமுறைகள். மறுபுறம், 13 பிராந்திய விடுமுறைகள் உள்ளன. அதாவது ஆகஸ்டில் 18 வங்கி விடுமுறைகள் உள்ளன.
விடுமுறை பட்டியல்:
ஆகஸ்ட் 1: த்ருக்பா டிசி ஜி – காங்டாக்
ஆகஸ்ட் 8: முஹர்ரம் – ஜம்மு, ஸ்ரீநகர்
ஆகஸ்ட் 9: முஹர்ரம் – அகர்தலா, அகமதாபாத், ஐஸ்வால், பேலாப்பூர், பெங்களூரு, போபால், சென்னை, ஹைதராபாத், ஜெய்ப்பூர், கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், புது தில்லி, பாட்னா, ராய்ப்பூர் மற்றும் ராஞ்சி
ஆகஸ்ட் 11: ரக்ஷா பந்தன் – அகமதாபாத், போபால், டேராடூன், ஜெய்ப்பூர் மற்றும் சிம்லா
ஆகஸ்ட் 12: ரக்ஷா பந்தன் – கான்பூர் மற்றும் லக்னோ
ஆகஸ்ட் 13: தேசபக்தர் தினம் – இம்பால்
ஆகஸ்ட் 15: சுதந்திர தினம் – இந்தியா முழுவதும்
ஆகஸ்ட் 16: பார்சி புத்தாண்டு (ஷாஹேன்ஷாஹி) – பேலாபூர், மும்பை மற்றும் நாக்பூர்
ஆகஸ்ட் 18: ஜன்மாஷ்டமி – புவனேஸ்வர், டேராடூன், கான்பூர் மற்றும் லக்னோ
ஆகஸ்ட் 19: ஜன்மாஷ்டமி (ஷ்ரவன் வத்-8)/ கிருஷ்ண ஜெயந்தி — அகமதாபாத், போபால், சண்டிகர், சென்னை, காங்டாக், ஜெய்ப்பூர், ஜம்மு, பாட்னா, ராய்ப்பூர், ராஞ்சி, ஷில்லாங் மற்றும் சிம்லா
ஆகஸ்ட் 20: ஸ்ரீ கிருஷ்ண அஷ்டமி – ஹைதராபாத்
ஆகஸ்ட் 29: ஸ்ரீமந்த சங்கரதேவரின் திதி – கவுகாத்தி
ஆகஸ்ட் 31: சம்வத்சரி (சதுர்த்தி பக்ஷா)/கணேஷ் சதுர்த்தி/ வரசித்தி விநாயக விரதம்/ விநாயகர் சதுர்த்தி — அகமதாபாத், பேலாபூர், பெங்களூரு, புவனேஸ்வர், சென்னை, ஹைதராபாத், மும்பை, நாக்பூர் மற்றும் பனாஜி
வார இறுதி விடுமுறைகள்
ஆகஸ்ட் 7: முதல் ஞாயிறு
ஆகஸ்ட் 13: இரண்டாவது சனிக்கிழமை + தேசபக்தர் தினம்
ஆகஸ்ட் 14: இரண்டாவது ஞாயிறு
ஆகஸ்ட் 21: மூன்றாவது ஞாயிறு
ஆகஸ்ட் 27: நான்காவது சனிக்கிழமை
ஆகஸ்ட் 28: நான்காவது ஞாயிறு