ஓடிடி தளங்களுக்கு தணிக்கையை அமல்படுத்த வேண்டும்! பிரதமருக்கு பீகார் முதலமைச்சர் கடிதம்!
வலைத்தளங்களில் வெளியாகும் படங்களுக்கு தணிக்கையை அமல்படுத்த வேண்டும்.
இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உலா வரும் இடமாக இணையதளம் அமைந்துள்ளது. இந்த இணையதளம் மூலம் பல நல்ல விடயங்களை கற்றுக் கொண்டாலும், மக்களின் வாழ்வில் சீர்கேடுகளை ஏற்படுத்தும் பல கெட்ட விடயங்களும் உலா வருகிறது.
இந்நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக, மக்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக அமேசான், நெட்பிளிக்ஸ் உள்ளிட்டா ஸ்ட்ரீமிங் வலைத்தளங்களில் படங்கள் வெளியாகிறது. இந்த படங்களில் அதிகமாக வன்முறையும், ஆபாசமும் இருக்கிறது. இது பார்ப்பவர்களின் மனதில் தக்கத்தை ஏற்படுத்தும் விதத்தில் உள்ளது.
இந்நிலையில், பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், வலைத்தளங்களில் வெளியாகும் படங்களுக்கு தணிக்கையை அமல்படுத்த வேண்டும் என பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.