மகாராஷ்டிராவில் உள்ள தாவூத் இப்ராஹிமின் சொத்துக்கள் நேற்று ஏலம் விடப்பட்டுள்ளது. இந்த ஏலம் மும்பையில் உள்ள வருமான வரி அலுவலகத்தில் SAFEMA இன் கீழ் நிதி அமைச்சகத்தின் வருவாய் துறையால் நடத்தப்பட்டது. மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டம் மும்ப்கே கிராமத்தில் உள்ள அவரது விவசாய நிலமும், அவரது குழந்தைப் பருவ வீடும் ஏலம் விடப்பட்டுள்ளது.
இந்த சொத்துக்கள் அனைத்தும் தாவூத் இப்ராஹிமின் குடும்பத்தினருக்கு சொந்தமானவை என்பதால் ரூ.19 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. இதில் இரண்டு சொத்துக்களை யாரும் எடுக்கவில்லை. அதில் ஒரு சொத்து ரூ.2 கோடிக்கும், மற்றோரு சொத்து 3 லட்சத்திற்கும் ஒரே நபர் ஏலத்தில் எடுத்தார். ஏலத்தை எடுத்த நபர் குறித்த தகவல் தெரிவிக்கவில்லை. அந்த நிலத்தில் பள்ளிக்கூடம் கட்டப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
10 ஆண்டுகளுக்குப் பிறகு சிறையில் இருந்து வந்த பிஸ்டோரியஸ்..!
இதற்கு முன், அரசால் கைப்பற்றப்பட்ட தாவூத் சொத்துக்களின் முதல் ஏலம் 2000 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. ஏலம் மிகப் பெரிய அளவில் நடந்தாலும் பயம் காரணமாக யாரும் ஏலம் எடுக்க வரவில்லை. கடந்த 1993 மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய தாதா தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானின் கராச்சில் மறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
மும்பை நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராஹிமை சர்வதேச குற்றவாளியாக ஐ.நா.வும், அமெரிக்காவும் அறிவித்துள்ளன. அதேநேரத்தில் இந்தியாவும் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது.
மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடின. டாஸ்…
மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி நேற்று (மார்ச் 30) நாக்பூர் பயணம் மேற்கொண்டது, இந்த பயணத்தில் ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சியின் நிறுவனரும், 2018 முதல் 2022 வரை பாகிஸ்தானின் பிரதமராக பதவி வகித்தவருமான…
மும்பை : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதி…
மும்பை : ஐபிஎல் 2025-ல் இன்று (மார்ச் 31) மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பையின்…