மாணவர்கள் கவனத்திற்கு…கல்லூரிகளில் இவை கட்டாயம் – AICTE அதிரடி உத்தரவு!
நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு குறைந்தும்,அதிகரித்தும் காணப்படுகிறது.இதனால், முகக்கவசம் அணிதல், கிருமிநாசினியை பயன்படுத்துதல் போன்றவற்றை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன.
இந்நிலையில்,கல்லூரி வளாகங்களில் மாணவர்கள் மாஸ்க் அணிவதை உறுதிப்படுத்த வேண்டும் என அனைத்து தொழில்நுட்ப கல்வி நிலையங்களுக்கும் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் உத்தரவு(AICTE) பிறப்பித்துள்ளது.
- மேலும்,கல்லூரிக்கு வருகை புரியும் மாணவர்கள்,ஊழியர்கள் என அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
- தனி மனித இடைவெளியை அனைத்து மாணவர்களும் ஊழியர்களும் பின்பற்ற வேண்டும்.
- கிருமிநாசினி பயன்படுத்துதல் உள்ளிட்டவை கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும்.
- குறிப்பாக,கொரோனா வைரஸ் அறிகுறி உடையவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
- கல்லூரி வளாகம் மற்றும் பேருந்துகள் போன்றவற்றை கட்டாயமாக சுத்தம் செய்தல் மற்றும் வழக்கமான கிருமி நீக்கம் செய்வது உறுதி செய்யப்பட வேண்டும்.
- திறந்த வெளியில் எச்சில் துப்புவது கண்டிப்பாக தடை செய்யப்பட வேண்டும்.
- அனைத்து ஏசி சாதனங்களின் வெப்பநிலை 24-30° C வரம்பில் இருக்க வேண்டும்.
- வெளிநாட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை தொடர வேண்டும் என அனைத்து தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
- குறிப்பாக,ஆசிரியர்கள்,மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் உளவியல் ஆதரவை பெற https://manodarpan.education.gov.in/ என்ற இணையதளம் மற்றும் 08046110007 என்ற உளவியல்-சமூக கட்டணமில்லா உதவி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.