மாணவர்கள் கவனத்திற்கு! நீட் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பப் பதிவு தொடக்கம்.
இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பப் பதிவு ஆன்லைனில் தொடங்கியது. அதன்படி, மாணவர்கள் https://neet.nta.nic.in என்ற இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு மே 7-ஆம் தேதி நாடு முழுவதும் நாடைபெற உள்ளது. இதனிடையே, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நேற்று நாடு முழுவதும் 600 தேர்வு மையங்களில் நடைப்பெற்றது.
எம்பிபிஎஸ் முடித்த 1.60 லட்சத்துக்கும் அதிகமான மருத்துவர்கள் நேற்று நீட் தேர்வு எழுதினர். இந்த நிலையில், 2023-24 ஆம் ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் மற்றும் இதர இளங்கலை படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு இன்று ஆன்லைனில் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.