பராமரிப்பு பணிகள் காரணமாக எஸ்பிஐ வங்கிகளில் ஆன்லைன் வங்கி சேவை, டிஜிட்டல் வங்கி சேவை இன்றும் நாளையும் சில மணி நேரம் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீங்கள் எஸ்பிஐ வாடிக்கையாளர்களாக இருந்து, இணைய சேவைகளை பயன்படுத்துபவர்களாக இருந்தால் உங்களுக்கு தான் இந்த முக்கியமான தகவல். எஸ்பிஐ ஆன்லைன் வங்கி சேவைகள் இன்றும் நாளையும் சிறிது நேரம் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. பாரத ஸ்டேட் வங்கியின் ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், எஸ்பிஐ ஆன்லைன் வங்கி சேவை மற்றும் டிஜிட்டல் சேவைகள் ஆகஸ்ட் 6 மற்றும் 7 ம் தேதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக சில மணி நேரங்கள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது ஆகஸ்ட் 6-ம் தேதி 22.45 மணி முதல் ஆகஸ்ட் 7ஆம் தேதி 1.15 மணி வரை இந்த பராமரிப்பு பணிகள் நடைபெறும் எனவும், இந்த சில மணி நேரங்கள் எஸ்பிஐ வங்கியின் இணைய சேவைகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட நேரத்தில் வாடிக்கையாளர்கள் எஸ்பிஐ யோனோ, யோனோ லைட் மற்றும் யோனோ பிசினஸ் உள்ளிட்ட பிற டிஜிட்டல் தளங்களை கூட பயன்படுத்த முடியாதாம். இந்த பராமரிப்பு பணிகள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்க இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு வாடிக்கையாளர்கள் ஒத்துழைக்க வேண்டுமெனவும் எஸ்பிஐ கேட்டுக் கொண்டுள்ளது.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…