கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – RBI முக்கிய அறிவிப்பு!

வாடிக்கையாளர்களின் நலன் கருதி,சமீபத்தில் கிரெடிட் கார்டு விதிமுறைகளை ரிசர்வ் வங்கி(RBI) வெளியிட்டது.அதன் ஒரு பகுதியாக, வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பில்லிங் சுழற்சியை மாற்றியமைக்க ஒரு முறை வாய்ப்பை(one time modification) வழங்க வேண்டும் என்று ஆர்பிஐ பரிந்துரைத்துள்ளது.
பொதுவாக,பில்லிங் சுழற்சி அல்லது பில்லிங் காலம் என்பது கார்டு-வழங்குபவர் செய்யும் இரண்டு தொடர்ச்சியான பில்களின் இறுதித் தேதிகளுக்கு இடையே உள்ள கால இடைவெளி ஆகும்.மேலும்,கிரெடிட் கார்டில்,கட்டணம் செலுத்தும் தேதி பொதுவாக பில்லிங் காலம் முடிந்த 15-25 நாட்களுக்குப் பிறகு கிரெடிட் கார்டுக்கு கட்டணம் செலுத்த வேண்டும்.
பில்லிங் காலத்தில் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு,கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் பில்லிங் சுழற்சியின் தொடக்கத்திலிருந்து பணம் செலுத்த வேண்டிய தேதி வரை வட்டியில்லா காலத்தை அனுபவிக்கிறார்கள்.ஆனால், நிலுவைத் தேதிக்குப் பிறகு செய்யப்படும் கொடுப்பனவுகளுக்கு(Payments) பணம் செலுத்தாவிட்டால் வட்டியுடன் அபராதமும் விதிக்கப்படும். இதனால்,கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படும்.
இந்த நிலையில்,பில்லிங் காலத்தை ஒரு முறை விருப்பமாக மாற்ற அனுமதிக்கும் ஆர்பிஐ-இன் புதிய உத்தரவின் மூலம்,உங்கள் வசதி மற்றும் பணப்புழக்கத்திற்கு ஏற்ப கட்டணம் செலுத்தி பில்லிங் சுழற்சியை நீங்களே தேர்வு செய்யலாம்.குறிப்பாக,ஒவ்வொரு மாதத்திலும் நீங்கள் 10 ஆம் தேதிக்கு முன்னதாகவே கிரெடிட் கார்டுக்கு பணம் செலுத்த விரும்பினால்,அதற்கு ஏற்ப கிரெடிட் கார்டு பில்லிங் சுழற்சியை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றியமைத்து கொள்ளலாம்.
இந்த புதிய விதியானது பல கிரெடிட் கார்டுகளை வைத்திருக்கும் நபர்களுக்கும் வசதியாக இருக்கும்.இந்த விதி ஜூலை 1, 2022 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!
February 25, 2025
வங்காள விரிகுடாவில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.1 ஆக பதிவானதால் மக்கள் அச்சம்!
February 25, 2025
சாம்பியன்ஸ் டிராபி: அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா, நியூசிலாந்து! வெளியேறிய பாக், வங்.,அணிகள்.!
February 25, 2025
NZvBAN : என்னைக்கும் விடாமுயற்சி…அதிரடி காட்டிய ரச்சின் ரவீந்திரா! அதிர்ந்த பங்களாதேஷ்!
February 24, 2025
இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!
February 24, 2025