இலங்கையில் இந்திய விசா அதிகாரி மீது தாக்குதல்.. இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தல்…
இலங்கை நேற்று நடைபெற்ற தாக்குதலில் இந்திய விசா அதிகாரி விவேக் வர்மா தாக்கப்பட்டார்.
இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக , அத்யாவசிய பொருட்களின் விலை கடும் ஏற்றம் கண்டது. ஆதலால், மக்கள் வீதிகளில் இறங்கி போராடும் சூழல் வந்தது.
அந்த சமயம் அரசு உடைமைகள் பல சேதமடைந்தன. அப்போது இந்திய அரசை சார்ந்த விசா அதிகாரி விவேக் வர்மாவை நேற்று இரவு மர்ம நபர்கள் தாக்கியுள்ளனர். இதில், இவர் படுகாயமுற்றுள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான விவேக் வர்மாவை இந்திய உயர் ஸ்தானிகராலய அதிகாரிகள் சென்று பார்த்துவிட்டு வந்துள்ளனர். மேலும், இந்திய மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், அடுத்தகட்ட நகர்வுகளை திட்டமிட்டு வைத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Officials of @IndiainSL met in the morning Mr. Vivek Varma, an Indian national and Director of Indian Visa Center, who sustained grievous injuries in an unprovoked assault last night near #Colombo. Matter brought to attention of authorities in #SriLanka. (1/ pic.twitter.com/tUc0SOq0Gd
— India in Sri Lanka (@IndiainSL) July 19, 2022