லண்டனில் உள்ள இந்திய தூதரகம் மீதான தாக்குதல்.! என்.ஐ.ஏ விசாரணை.!
இந்திய தூதரகம் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி ஒரு மாதமான நிலையில், என்.ஐ.ஏ விசாரணை.
பஞ்சாப் மாநிலத்தில் அம்ரித் பால் என்பவரை காவல்துறையினர் கைது செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர். இவர் காலிஸ்தான் பிரிவினைவாத முக்கிய நபர் ஆவர். இவரது கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், சமீபத்தில் லண்டனில் இந்திய தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தபட்டது. இந்த சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் இங்கிலாந்து அரசு இந்திய தூதரக தாக்குதல் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை கூறப்படுகிறது.
இதனால், இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தையை மத்திய அரசு நிறுத்தி வைத்திருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், லண்டனில் உள்ள இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணை என்.ஐ.ஏ.வுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்திய தூதரகம் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி ஒரு மாதமான நிலையில், என்.ஐ.ஏ விசாரிக்கவுள்ளது.