விவசாயி மீது தாக்குதல்.. காவல்துறைக்கு எதிராக கண்டனம் தெரிவித்த பாஜக மூத்த தலைவர்
கானௌரி எல்லையில் காயமடைந்த விவசாயிக்கு எதிராக தாக்குதல் நடத்திய ஹரியானா காவல்துறைக்கு எதிராக பாஜக மூத்த தலைவர் அமரீந்தர் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 13-ம் தேதி முதல் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் கானௌரி மற்றும் ஷம்பு எல்லைகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளும், மத்திய அரசுக்கும் இடையே 4 கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. விவசாயிகள் டெல்லியை நோக்கி செல்ல முடியாதபடி எல்லை பகுதிகளில் போலீசார் குவிக்கப்ட்டுள்ளனர்.
READ MORE- ஹரியானாவில் இந்திய தேசிய லோக்தளம் கட்சியின் மாநிலத் தலைவர் சுட்டுக்கொலை
விவசாயிகள் தடுப்பணைகளை விலகி கொண்டு முன்னேறும்போதும் கண்ணீர் புகை குண்டுகளை போலீசார் வீசி வருகின்றனர். கடந்த பிப்ரவரி 21 அன்று கானௌரியில் நடந்த மோதலில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயி ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து ‘டெல்லி சலோ’ பேரணியை விவசாயிகள் தலைவர்கள் ஒத்தி வைத்தனர். அதன்படி பிப்ரவரி 29 வரை விவசாயிகள் பேரணியை ஒத்தி வைத்தனர்.
அதுவரை ஹரியானா மற்றும் பஞ்சாப் எல்லையில் அமைந்துள்ள கானௌரி மற்றும் ஷம்பு எல்லைகளில் விவசாயிகள் இருப்பார்கள்என்று விவசாயிகள் தலைவர்கள் தெரிவித்தனர். பிப்ரவரி 29-ம் தேதிக்கு பிறகு தங்கள் அடுத்த நடவடிக்கையை அறிவிப்போம் என்று விவசாய தலைவர் சர்வான் சிங் பாந்தர் கூறினார். இந்நிலையில், ப்ரித்பால் சிங் என்ற விவசாயி கானௌரியில் உணவு வழங்கி கொண்டு இருந்தபோது அவர் காவல்துறையினரால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
READ MORE- அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான ஊழல் வழக்கு.! பிடிவாரண்ட் பிறப்பிக்கவும் உத்தரவு.!
இதற்கிடையில் கானௌரி எல்லையில் நடந்த போராட்டத்தின் போது காயமடைந்த விவசாயிக்கு எதிராக காட்டுமிராண்டித்தனமான வன்முறை தாக்குதல் நடத்தியாக ஹரியானா காவல்துறை பாஜக மூத்த தலைவர் அமரீந்தர் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் தனது எக்ஸ் பக்கத்தில் “எங்கள் இளம் விவசாயி ப்ரீத்பால் சிங்குக்கு எதிராக ஹரியானா காவல்துறை நடத்திய காட்டுமிராண்டித்தனமான வன்முறையை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். மக்களுக்கு சேவை செய்து கொண்டிருந்த நிராயுதபாணி இளைஞரை கொடூரமாக தாக்கிய குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டாரை அவர் வலியுறுத்தி” பதிவிட்டுள்ளார்.
READ MORE-இன்று திறக்கப்படும் கலைஞர் நினைவுகம்.! என்ன ஸ்பெஷல்.?
காயமடைந்த ப்ரீத்பால் தற்போது சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவ மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (PGIMER) சிகிச்சை பெற்று வருகிறார். டெல்லியை நோக்கிப் பேரணியாகச் சென்ற விவசாயிகளைத் தடுக்கும் ஹரியானா காவல்துறையின் நடவடிக்கைகளை பாஜக தலைவர் ஒருவர் விமர்சித்த முதல் கருத்து இதுவாகும்.
I strongly condemn the barbaric act of violence committed by the Haryana Police on our young farmer Pritpal Singh. I urge Haryana CM @mlkhattar to take strict action against the policemen who are guilty of badly beating up an unarmed youngster who was just serving langar to…
— Capt.Amarinder Singh (@capt_amarinder) February 25, 2024