சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல்!! மத்திய அமைச்சரவை இன்று காலை கூடுகிறது!!!
ஜம்மு காஷ்மீர் புல்வாமாவில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடந்துள்ள நிலையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை இன்று காலை கூடுகிறது.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர்.தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.இதனால் அங்கு பதற்றம் நிலவியுள்ளது.
பின் ஜம்மு-காஷ்மீர் புல்வாமா தாக்குதல் சம்பவம் தொடர்பாக உளவுத்துறை இயக்குநர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், ராணுவ உயரதிகாரிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனையில் ஈடுபட்டார்.
அதன் பின்னர் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு ஜம்மு காஷ்மீர் புல்வாமா தாக்குதலை நிகழ்த்தியுள்ளது. பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடந்துள்ள நிலையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை இன்று காலை கூடுகிறது.
மேலும் 1980ஆம் ஆண்டுக்கு பின்னர், பாதுகாப்புப் படையினர் மீது தீவிரவாதிகள் நடத்தும் மிகப்பெரிய தாக்குதல் இது, என தெரிவிக்கப்பட்டுள்ளது