ஆந்திர மாநில அமைச்சர் ரோஜா வாகனத்தை வழிமறித்து பவன் கல்யாண் கட்சியினர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, 25 பேரை கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் ஆளும்கட்சி அமைச்சராக இருக்கிறார் நடிகை ரோஜா. இவர் தலைமையில் விசாகா பகுதியில் ஆந்திர மாநிலத்திற்கு 3 தலைநகர் வேண்டும் என கோரிக்கை வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த போராட்டம் முடிந்த பிறகு, ரோஜா விமான நிலையத்திற்கு புறப்பட்டார். அப்போது , நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியினர் ரோஜாவின் காரை வழிமறித்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் ரோஜாவின் கார் ஓட்டுனருக்கு தலையில் பலத்த அடி ஏற்பட்டுள்ளது.
இதனை தடுக்க முயன்ற காவல்துறையினருக்கும், தாக்குதல் நடத்தியவருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இதனால் காவல்துறையினர் சிலருக்கும் அடிபட்டுள்ளது .
இந்த சம்பவத்தை அடுத்து, ஜனசேனா கட்சியினர் 25 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு, அரசு பணியாளர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது .
நைரோபி : அமெரிக்க முன்வைத்த குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள், நேற்று பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டது. இதன் விளைவாக…
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…
சென்னை :கேரளா ஸ்டைலில் காரசாரமான நாவூறும் சுவையில் சம்மந்தி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான…
டெல்லி : அமெரிக்க வழக்கறிஞர்கள், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது இன்று ஒரு பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். அவர்…