3 தீவிரவாதிகள் காஷ்மீர் மாநிலத்தில் சுட்டுக்கொலை!
3 தீவிரவாதிகள் காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். அனந்த்நாக் மாவட்டத்தின் ஹக்கூரா (Hakoora) என்ற இடத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் அங்கு விரைந்த பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டை மேற்கொண்டனர். அப்போது மறைவிடத்திலிருந்து தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுடத் தொடங்கியதையடுத்து பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுத்தனர்.
இதில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். உயிரிழந்த தீவிரவாதிகளில் இருவர் ஈசா ஃபசிலி (Eesa Fazili) சையத் ஓவைஸ் (Syed Owais) என்று தெரிய வந்துள்ளது. தீவிர வாதிகளிடம் இருந்து ஏ.கே.47 மற்றும் கைத்துப்பாக்கிகள், கையெறிகுண்டுகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனிடையே தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து கலவரம் வெடிக்கக் கூடும் என்ற அச்சம் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.