Categories: இந்தியா

கேரளாவில் நடந்த கொடூரம்! ரயிலில் சகபயணி மீது பெட்ரோல் ஊற்றி எரிப்பு.. குழந்தை உள்பட 3 பேர் பலி!

Published by
பாலா கலியமூர்த்தி

கேரளாவில் ஓடும் ரயிலில் சகபயணி மீது மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரித்ததால் பரபரப்பு.

கேரள மாநிலத்தில் ரயிலில் கொடூர சம்பவம் நடந்துள்ளது. அதாவது, ஆலப்புழா – கண்ணூர் சென்ற ரயிலில் சகபயணி மீது மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரித்ததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. கோழிக்கோடு மாவட்டம் எலத்தூர் அருகே ஓடும் ரயிலுக்குள் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சகபயணி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இரவு 10 மணியளவில் ஆலப்புழா-கண்ணூர் மெயின் எக்ஸிகியூட்டிவ் எக்ஸ்பிரஸ் டி1 பெட்டியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

தகராறு காரணமாக ஓடும் ரயிலுக்குள் சக பயணியை மர்ம நபர் தீ வைத்து எரித்ததாக தகவல் கூறப்படுகிறது. தீக்கு பயந்து ரயிலில் இருந்து குதித்த குழந்தை உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவம் நடந்த ரயில் பாதைக்கு அருகில் ஒரு குழந்தை உட்பட 3 பேரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதில், மட்டன்னூரைச் சேர்ந்த ரஹ்மத், அவரது சகோதரியின் இரண்டு வயது மகள் மற்றும் நௌஃபல் ஆகியோர் ரயில் தண்டவாளம் அருகே சடலமாக மீட்கப்பட்டனர்.

மேலும், இந்த சம்பவத்தில் காயமடைந்த 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. தீ வைத்த மர்ம நபர் ரயிலின் அபாய சங்கிலியை இழுத்து, ரயிலை நிறுத்தி தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறை விசாரணை நடத்தி வரும் நிலையில், தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதனிடையே, இந்த விவகாரத்தில் தலையிட்டு, ரயிலில் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் உட்பட பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரி, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு, கண்ணூர் கேபிசிசி தலைவரும், எம்.பி.யுமான கே.சுதாகரன் கடிதம் எழுதியுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

முதல் சதம் அடித்த நிதிஷ் குமார் ரெட்டி! அசத்தல் பரிசுதொகை அறிவித்த ஆந்திர கிரிக்கெட் வாரியம்!

முதல் சதம் அடித்த நிதிஷ் குமார் ரெட்டி! அசத்தல் பரிசுதொகை அறிவித்த ஆந்திர கிரிக்கெட் வாரியம்!

மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…

10 hours ago

கனமழையை தொடர்ந்து குளிர்! டெல்லி மக்களை வாட்டி வதைக்கும் வானிலை!

டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…

11 hours ago

ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை…பொங்கல் பரிசு தொகுப்பை அறிவித்த தமிழக அரசு!

சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…

12 hours ago

“அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் ”.. ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு!

சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை  சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது.  மாணவி கொடுத்த புகாரின்…

12 hours ago

வன்கொடுமை விவகாரம் : FIR லீக்கான காரணம் இது தான்..அமைச்சர் ரகுபதி விளக்கம்!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில்  மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…

13 hours ago

ராமதாஸ் உடன் பாமக நிர்வாகிகள் ஆலோசனை! அன்புமணியை சமாதானம் செய்ய முடிவு?

சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில்  இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…

13 hours ago