அடேங்கப்பா: ஒரு ஊரே சேர்ந்து கீழே இருந்த லாரியே மேலே இழுத்து வந்த சம்பவம்.!

Default Image

பள்ளத்தில் சரிந்த லாரியை ஒரு ஊரே சேர்ந்து இழுத்த அதிசியம் நாகாலாந்தில் நடந்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

நாகாலாந்தில் சரக்குகளுடன் மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்த லாரி ஒன்று, திடீரென பள்ளத்தில் சரிந்தது. அதிர்ஷ்டவசமாக அது மிகவும் ஆழமான பள்ளம் இல்லை. ட்ரைவர் மற்றும் கிளீனர் சிறிய காயங்களுடன் தப்பினர். ஆனால், பள்ளத்தில் சரிந்த லாரியை எப்படி மேல கொண்டு வரலாம், ஒரு கிரேனை கொண்டு வந்து மேல தூக்கலாம், இழுக்கலாம். ஆனால் அந்த இடத்துக்கு கிரேன் வருவதற்கு சாத்தியமில்லை, மிக குறுகிய சாலை, திரும்ப செல்ல முடியாது. இப்படி இருக்கும் நிலையில், ஒரு ஆசிரியமும், அதிசயமும் நிகழ்ந்துள்ளது.

அது என்னவென்றால், அங்கு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த கிராம மக்கள், மேலும் அப்பகுதிக்கு பயணம் செய்தவர்கள் என அனைவரும் ஒன்றாக திரண்டு, பல கயிறுகளை லாரியில் கட்டி, ஒரு ஊரே சேர்ந்து அந்த லாரியை கொஞ்ச கொஞ்சமாக பள்ளத்தில் இருந்து மேல இழுத்துள்ளனர். இது ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி என்றும் கூறலாம். ஏனெனில் கீழே இருந்த லாரியை எப்படி மேலே கொண்டுவருவது என்ற எண்ணிய நிலையில், இப்படி ஒரு அதிசயம் நிகழ்ந்துள்ளது.

இதை பார்த்தால் மக்கள் ஒன்று சேர்ந்தால் எதையும் சாதிக்க முடியும் என்று நிரூபித்துள்ளனர். இந்த வீடியோவை பார்த்தால் உங்களுக்கு அது புரியும். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை இதுவரை 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். இதனை ட்விட்டர் பக்கத்தில் பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் Mmhonlumo Kikon என்பவர் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்