முதலில் 70 ஆயிரம் கோடி.! இப்போது 2 லட்சம் கோடி.! மத்திய பிரததேசத்தில் பிரதமர் மோடி பேச்சு.!
கிராம பஞ்சாயத்துக்கு தற்போது 2 லட்சம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.
இன்று தேசிய பஞ்சாயத்து தினமானது நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதனை குறிப்பிட்டு இன்று மகாராஷ்டிராவில் ரேவா மாவட்டத்தில் இன்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றி வருகிறார். நாடு முழுவதும் உள்ள பஞ்சாயத்து ராஜ் நிறுவன பிரதிநிதிகள் மற்றும் கிராம சபைகளின் பிரதிநிதிகள் மற்றும் செயல்பாட்டாளர்கள் கலந்துகொண்டு உள்ளனர்.
இந்த விழாவில், பிரதமர் மோடி, பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 4.11 லட்சம் பயனாளிகளுக்கு காணொளி வாயிலாக புதிய வீடுகளை வழங்கும் திட்டத்தை தொடங்கி உள்ளார். மேலும், ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ₹ 7,853 கோடி மதிப்பிலான பல்வேறு மக்கள் நலப்பணிகளை பிரதமர் தொடங்கி வைத்துள்ளார்.
அதன் பின் உரையாற்றிய பிரதமர், 2014க்கு பிறகு, 70,000 கோடி ரூபாயாக இருந்த பஞ்சாயத்துகளுக்கு ஒதுக்கப்பட்ட பட்ஜெட் தொகையானது தற்போதைய பட்ஜெட்டில் 2 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.
நான் எப்பொழுதும் நினைப்பது, நீங்கள் நீண்டகாலமாக நம்பி வந்த சிந்த்வாரா மக்கள், ஏன் அவர்கள் உங்கள் வளர்ச்சியில் ஒருபோதும் அக்கறை காட்டவில்லை? சுதந்திரத்திற்குப் பிறகு அரசாங்கத்தை அதிகம் நடத்திய கட்சி (காங்கிரஸ்), அந்த கிராமங்களின் நம்பிக்கையை இழந்துள்ளது. என குறிப்பிட்டார்.
கிராமப்புற இந்தியாவின் வாழ்க்கையை எளிதாக்குவதற்கு அரசாங்கம் என்ன திட்டங்களைச் செய்திருந்தாலும், அவற்றை நமது பஞ்சாயத்துகள் முழு அர்ப்பணிப்புடன் செயல்படுத்தி வருகின்றனர். நாட்டில் பஞ்சாயத்து ராஜ் அமைப்பை வலுப்படுத்த எங்கள் அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என மத்திய பிரதேச உரையில் பிரதமர் மோடி ஆற்றி வருகிறார்.