நீதித்துறையில் தொழில்நுட்ப பயன்பாடு.. அங்கிலேய பாதிப்பு.! உச்சநீதீர்மன்ற தலைமை நீதிபதியின் கருத்துக்கள்.!

Default Image

டெல்லியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் இந்திய நீதித்துறை பற்றி தனது கருத்துக்களை தெரிவித்தார். 

டெல்லியில் நேற்று நீதித்துறை பற்றிய ஒரு சிறப்பு நிகழ்வு நடைபெற்றது. இதில், இந்தியாவின் தலைமை நீதிபதி சந்திரசூட் கலந்து கொண்டார். அப்போது அந்த நிகழ்வில் நீதிபதி சந்திரசூட் பேசுகையில், இந்தியாவின் நீதித்துறை பற்றியும் நீதித்துறை எவ்வாறு நவீனப்படுத்துவது என்பது பற்றியும், நீதித்துறையில் ஆங்கிலேயே பாதிப்பு, தேங்கி இருக்கும் வழக்குகள், தொழில்நுட்ப உதவிகள் பற்றியும் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

நீதிபதிகளுக்கு அறிவுரை :

நீதிபதி சந்திரசூட் பேசுகையில், நீங்கள் ஒரு வழக்கில் தீர்ப்பு அளிக்கும் போது அது நியாயம் தீர்க்கும் தீர்ப்பாக அமைய வேண்டும். எந்த வகையிலும் அது நிரபராதிகளை பாதிக்கும்படி இருக்க கூடாது என்பதில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என நீதிபதிகள் மத்தியில் கூறினார். மேலும், நீதிபதிகள் எப்போதும் தங்களது தனிப்பட்ட நம்பிக்கைகளை ஒதுக்கி வைக்க வேண்டும் என்பதை சுட்டி காட்டினார்.

தேங்கி இருக்கும் வழக்குகள் :

நீதித்துறையும் சவால்கள் பற்றி பேசுங்கள் இந்திய நீதிமன்றங்களில் ஏராளமான வலதுகள் நிலுவையில் இருக்கின்றது இந்த வழக்குகள் மக்களின் விதிகளை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிக்கிறது என்றும் இது நீதி துறையின் உட்கட்டமைக்கு உள்ள பற்றாக்குறை என்றும் அவர் குறிப்பிட்டார் அதாவது நிலுவையில் தேங்கி இருக்கும் வழக்குகள் வழக்குகள் ஆனது நீதிபதி மற்றும் மக்கள் தொகை விகிதத்தை கொண்டு அதன் பற்றாக்குறையே நீதித்துறை எதிர்கொள்ளும் பிரச்சனை என்றும் நீதிபதி சந்திரசேகர் குறிப்பிட்டார்.

ஆங்கிலேயர் காலத்து பாணி :

நீதித்துறையை நவீனமாக்குவது பற்றி குறிப்பிடுகையில், இந்திய நீதி துறையை முழுமையாக நவீனமயமாக்க வேண்டும் எனவும், இந்திய நீதித்துறையானது ஆங்கிலேயர் இடம் இருந்து நாம் பெற்ற அறிவுறுத்தல்களை அடிப்படையாக கொண்டது. நமது கட்டிடங்கள் கூட இன்னும் ஆங்கிலேயர் காலத்து பாணியில் தான் இருக்கிறது. இப்படிப்பட்ட பிரம்மாண்ட கட்டிடங்கள் மக்களின் மனதில் ஒரு பிரமிப்பை உண்டாக்கும் என்று அவர் குறிப்பிட்டார். நீதி என்பது அனைத்து குடிமக்களுக்கும் இன்றியமையாத தேவையாகும். ஆதலால், இந்த பிரமிப்பு (அச்சம்) என்பது மக்கள் மனதில் இருந்தாக வேண்டும் என்பதையும் நீதிபதி சந்திரசேகர் குறிப்பிட்டார்.

நீதித்துறையில் தொழில்நுட்பம் :

தொழில்நுட்ப பயன்பாடு பற்றி பேசுகையில், கோவிட் தொற்று காலத்தில் நீதித்துறையானது வீடியோ கான்பரன்சிங் தளங்களின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டது..வரும் காலத்தில் இதற்கு அப்பாற்பட்ட தொழில்நுட்பத்தை நாம் எதிர்பார்க்க வேண்டும் என்றும் இந்திய நீதித்துறையை நவீனமயமாக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்