சமூக இடைவெளியைக் கடைபிடிக்க மூங்கில் குச்சிகளை வைத்து வித்தியாசமான முறையில் நடைபெற்ற திருமணம்..!

Default Image

சத்தீஸ்கரில் நடைபெற்ற ஒரு திருமணத்தில் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க மணமக்கள்,மூங்கில் குச்சிகளை வைத்து மாலையை மாற்றிக்கொண்டு வித்தியாசமான முறையில் திருமணத்தை நடத்தியுள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையானது மிகத் தீவிரமாகப் பரவி வருகிறது.இதனால்,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.எனவே,கொரோனா பரவாமலிருக்க முகக்கவசம் அணிதல்,தடுப்பூசி போட்டுகொள்ளுதல் மற்றும் சமூக இடைவெளியைக் கடைபித்தல் போன்றவை கட்டாயமாக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில்,சத்தீஸ்கிராவைச் சேர்ந்த ஒரு தம்பதியினர்,கொரோனா தொற்று பரவும் இந்த கடுமையான சூழலில் திருமணம் செய்து கொண்டனர்.அதே நேரத்தில்,சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக தங்களுக்கு இடையில் சிறிது இடைவெளியைப் பின்பற்றி மூங்கில் குச்சிகளைப் பயன்படுத்தி ஒருவருக்கொருவர் திருமண மாலைகளை மாற்றிக்கொண்டனர்.இத்திருமணத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு தற்போது வைரலாகி வருகிறது.

இதனையடுத்து,சத்தீஸ்கர் மாநில கூடுதல் போக்குவரத்து ஆணையர் தீபன்ஷு கப்ரா இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கூறியதாவது,”கொரோனா தொற்றுக்கு மத்தியில் அரசின் நெறிமுறைகளுக்கு ஏற்ப திருமணங்களை நடத்துவதற்கு திருமண வீட்டார் வினோதமான புதிய வழிகளைக் கண்டுபிடித்து வருகிறார்கள்”,என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்