உதவி பேராசிரியர் நேரடி நியமனம் – பல்கலை.மானியக் குழு முக்கிய அறிவிப்பு!

UGC

உயர்கல்வி நிறுவனங்களில் உதவி பேராசிரியர்களை நேரடியாக நியமிக்க நெட் தேர்வில் பெறுவது அவசியம்.

உயர்கல்வி நிறுவனங்களில் உதவி பேராசிரியர்களை நேரடியாக நியமிக்க நெட், செட், ஸ்லெட் ஆகிய தேர்வுகளில் ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது. அதன்படி, உதவி பேராசிரியர்களை நேரடியாக நியமிக்க நெட், செட், ஸ்லெட் ஆகியவற்றில் ஏதாவது ஒரு தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஎச்.டி. உதவிப் பேராசிரியராக நியமனம் செய்வதற்கான தகுதி ஜூலை 1 முதல் விருப்பமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. மேலும், யுஜிசி நெட் தேர்வு முடிவை ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் வெளியிட தேசிய தேர்வு முகமை முடிவு செய்திருப்பதாகவும் பல்கலைக்கழக மானியக் குழு தலைவர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்