Karnataka Deputy CM DK Shivakumar [File Image]
கர்நாடக துணை முதல்வரும் , அம்மாநில நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமாருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த 2017 ஆகஸ்ட் மாதம் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது சுமார் 7.4 கோடி ரூபாய் கணக்கில் வராமல் இருந்ததாக கூறப்பட்டது.
இதனை அடுத்து சட்டவிரோத பணபரிவர்தனைகளை விசாரிக்கும் அமலாக்கத்துறையின் பரிந்துரையின் கீழ் சிபிஐ வழக்குப்பதிவு செய்து தங்கள் விசாரணையை தொடர்ந்தது. இந்த சிபிஐ விசாரணையானது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நடத்தப்படுகிறது எனவே சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் டி.கே.சிவகுமார் வழக்கு தாக்கல் செய்து இருந்தார் .
தச்சர்களிடம் மர நாற்காலி செய்ய கற்று கொண்ட ராகுல் காந்தி.!
டி.கே.சிவகுமார் தாக்கல் செய்த வழக்கு கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி நடராஜன் தலைமையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு , இன்று முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதில், சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என கூறி, இந்த வழக்கிற்கு சிபிஐவிசாரிக்க தடயில்லை இன்னும் 3 மாதத்திற்குள் இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.
இது தொடர்பாக இன்று, செய்தியாளர்களிடம் பேசிய டி.கே.சிவகுமார், இந்த வழக்கு தொடர்பாக எந்த நடவடிக்கையாக இருந்தாலும் அதற்கு முழு ஒத்துழைப்பு தருவேன். நமது நாட்டின் சட்டத்தை மதிக்கிறேன். நான் குற்றமற்றவன் என்பது எனக்கு தெரியும். நான் எந்த தவறும் செய்யவில்லை. என் ஆவணங்கள் சுத்தமாக உள்ளன. நான் தவறு செய்யாதவன். இது பாஜகவின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகும் என்றும் டி.கே.சிவகுமார் தெரிவித்தார்.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்றதில் இருந்து டோனால்ட் டிரம்ப், அடிக்கடி அதிரடி நடவடிக்கைகளை அறிவித்து வரும் நிலையில்,…
சென்னை : கடந்த சில நாட்களாக கோடைவெயில் வெளுத்து வாங்கிய நிலையில் நேற்று திடீரென சில மாவட்டங்களில் கனமழை வெளுத்து…
சென்னை : கைலாசாவில் வசித்து வருவதாக சொல்லப்படும் நித்தியானந்தா கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக அவருடைய சகோதரியின் மகன்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அடிக்கடி அதிரடி நடவடிக்கைகளை அறிவித்து வரும் நிலையில், இன்று (ஏப்ரல் 3)…
பெங்களூர் : நீங்க எமனாக மாறுவீர்கள் என்று நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை என சமூக வலைத்தளங்களில் சிராஜை பார்த்து ரசிகர்கள் பேசி…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில்…