ராஜஸ்தான் அரசியல் குழப்பம்.! மூன்றாவது முறையாக சட்டமன்றக் கட்சி கூட்டம்.!

Default Image

ராஜஸ்தானில் நடந்து வரும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், காங்கிரஸ் சட்டமன்றக் கட்சி கூட்டம் இன்று தொடங்கியது என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. அசோக் கெஹ்லோட் அரசாங்கத்தை ஆதரிக்கும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் முகாமிட்டுள்ள ஜெய்ப்பூரில் உள்ள ஒரு ஹோட்டலில்  மதியம் 1 மணியளவில் கூட்டம் தொடங்கியது.

இந்த கூட்டத்தில் முதலமைச்சர் அசோக் கெஹ்லோட் தேசிய பொதுச் செயலாளர் மற்றும் ராஜஸ்தான் பொறுப்பாளர் அவினாஷ் பாண்டே, கே.சி.வேணுகோபால், அஜய் மக்கன், ரன்தீப் சுர்ஜேவாலா, விவேக் பன்சால் உள்ளிட்ட  கலந்து கொண்டனர்.

கடந்த ஒரு வாரத்தில் நடைபெறும் மூன்றாவது கூட்டம் இதுவாகும்.  இந்நிலையில், தகுதிநீக்க நோட்டீஸ்களுக்கு எதிராக சச்சின் பைலட் மற்றும் 18 பிற காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று மீண்டும் வந்தது.

அப்போது சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் மீது வருகின்ற ஜூலை 24-ஆம் தேதி வரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என அம்மாநில சபாநாயகருக்கு ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்