கர்நாடகாவில் முன்கூட்டியே சட்டமன்ற தேர்தல் வரலாம்!ஆட்சி நீடிப்பது கடினம்-தேவகவுடா

Published by
Venu
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 224 உறுப்பினர்களை கொண்ட சட்டப்பேரவையில் 222 இடங்களுக்கு மட்டும் தேர்தல் நடந்தது. 2 இடங்கள் காலியாக உள்ளன. தனி்ப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜக சார்பில் 104 எம்எல்ஏக்கள் மட்டுமே வெற்றி பெற்றனர்.
காங்கிரஸூக்கு 78 உறுப்பினர்கள், மதச்சார்பற்ற ஜனதாதளத்திற்கு 36 உறுப்பினர்கள், பகுஜன் சமாஜ் உறுப்பினர் ஒருவரும், 2 சுயேச்சைகளும் வெற்றி பெற்றனர். பாஜக சார்பில் முதல்வராக பொறுப்பேற்ற எடியூரப்பா பெரும்பான்மையை நிருபிக்க முடியாத நிலையில் வெளியேறினார்.
நீண்ட குழப்பத்துக்குப் பிறகு மஜத மாநிலத் தலைவர் குமாரசாமி, காங்கிரஸ் ஆதவுடன் முதல்வராக பதவியேற்றார். சட்டப்பேரவையில் அவர் பெரும்பான்மையை நிருபித்தார். பெரும்பான்மைக்கு 111 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலையில், 117 உறுப்பினர்களின் ஆதரவு குமாரசாமிக்கு இருந்தது.இதனால் முதலமைச்சராக குமாரசாமி இருந்து வருகிறார்.
இந்நிலையில் காங்கிரஸ்-ஜனதா தளம் கட்சிகளுக்கு இடையேயான கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவரும் முன்னாள் பிரதமருமான   தேவகவுடா கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,கர்நாடகாவில் கூடிய விரைவில் தேர்தல் நடைபெறுவதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஏனென்றால் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தற்போது நடந்துகொள்வதை பார்த்தால் ஐந்து ஆண்டுகள் ஆட்சி நீடிப்பது கடினம் என்று தெரிகிறது . இரு கட்சிகளின் தலைவர்கள் கூறிவரும் கருத்துக்கள் என்னை மிகவும் காயப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக நான் ராகுல் காந்தியிடமும் கூறியுள்ளேன்’ என்று தெரிவித்துள்ளார்.இவரது கருத்து காங்கிரஸ்-ஜனதா தளம் கட்சிகளுக்கு இடையேயான கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published by
Venu

Recent Posts

தெற்கு வங்ககடலில் புதிய காற்று சுழற்சி…கனமழைக்கு வாய்ப்பு! டெல்டா வெதர்மேன் அலர்ட்!

சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

41 minutes ago

லண்டன் சென்று வந்த பிறகு அண்ணாமலைக்கு என்ன ஆனது எனத் தெரியவில்லை-திருமாவளவன் பேச்சு!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

1 hour ago

FIR-ஐ வெளியிட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவும் – தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

2 hours ago

“எனக்கு நானே சாட்டையடி கொடுக்கப் போகிறேன்” பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆவேசம்!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

3 hours ago

கல்யாண வீட்டு ஸ்பெஷல்..மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?.

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில்  பார்க்கலாம்.…

3 hours ago

புது புது முயற்சி விடாமுயற்சி! அசத்தல் அப்டேட் கொடுத்த அனிருத்!

சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல்  விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…

3 hours ago