ராஜஸ்தானில் நாளை சட்டமன்ற தேர்தல்..! பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!
இந்திய தேர்தல் ஆணையம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான அட்டவணையை வெளியிடப்பட்டது. நாளை ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் மீண்டும் தங்களது ஆட்சியை தக்க வைப்பதற்கான முயற்சிகளில் காங்கிரஸ் கட்சி ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளனர். அதைப்போல் பாஜகவும் மக்களை கவரும் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது. காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே நேரடியான போட்டி நிலவி வருகிறது.
பாஜக பெண்களுக்கு எதிரான கட்சி.! மம்தா கருத்துக்கு தேசியவாத காங்கிரஸ் எம்.பி ஆதரவு.!
199 சட்டமன்ற தொகுதிகளுக்கு நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 5 கோடியே 25 லட்சம் வாக்காளர்கள் நாளை வாக்களிக்க உள்ளனர். காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தமாக மாநில முழுவதும் 52,139 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
பதட்டமான வாக்குச்சாவடிகளுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், இணையதளம் மூலமாக நேரடியாக கண்காணிக்கும் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேர்தலை முன்னிட்டு 1.70 லட்சம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் 1300 அதிவிரைவு ரோந்து பணிகள் நடைபெற உள்ளது.