சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய இரண்டு மாநிலங்களில், இன்று சட்டமன்றத் தேர்தல் தொடங்கி, வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் முதல் கட்டமாக சத்தீஸ்கர் மாநிலத்தில் இருக்கும் 90 தொகுதிகளில், 20 தொகுதிகளில் மட்டுமே இன்று தேர்தல் தொடங்கி, முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதே போல மிசோரத்திலும் உள்ள 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலுக்காக சத்தீஸ்கரில் 20 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தமாக 5,304 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மிசோரம் மாநிலத்தில் மொத்தம் 1276 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
சத்தீஸ்கரில் உள்ள தேர்தல் நடைபெறும் பல தொகுதிகள் நக்சல் பாதித்த பஸ்தார் பிரிவில் உள்ளதால், சத்தீஸ்கரில் உள்ள 10 தொகுதிகளில் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது. அப்போது, சத்தீஸ்கரில் 59.19% வாக்குகள் பதிவானது.
மேலும், மீதமுள்ள கைர்கர், டோன்கர்கர், ராஜ்நந்த்கான், டோங்கர்கான் உள்ளிட்ட 10 தொகுதிகளில் மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், வாக்குப்பதிவு என்பது நிறைவடைந்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் புள்ளிவிவரப்படி, முதல் கட்ட வாக்குப்பதிவில் மாலை 5 மணி நிலவரப்படி, சத்தீஸ்கரில் 70.87% வாக்குகள் பதிவாகியுள்ளது.
அதேபோல, மிசோரம் மாநிலத்தில் மாலை 3 மணி அளவில் 69.86% வரை வாக்குகள் பதிவாகி இருந்தது. இப்போது 5 மணி நிலவரப்படி, 75.88% வாக்குகள் பதிவாகியுள்ளது. இரண்டாம் கட்ட தேர்தல் நவம்பர் 17ம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…
மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…
புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…