அசாம் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் முதலமைச்சர் வழங்கிய வெள்ள நிவாரண முறையீடு குறித்து போலி பதிவை வெளியிட்டதால் கைது செய்யப்பட்டார்.
கடந்த சில வாரங்களுக்கு மேலாக அசாம் மாநிலத்தில் பெய்து வரும் மழையால் 24 மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கௌகாதி பல்கலைக்கழகத்தில் மாஸ் கம்யூனிகேஷன் மற்றும் ஜர்னலிசத்தின் இரண்டாவது செமஸ்டர் படிக்கும் டிப்ஜோதி கோகோய் என்ற மாணவன் தனது பேஸ்புக் பக்கத்தில் போலி பதிவு ஒன்றை பதிவிட்டதை அடுத்து கைது செய்யப்பட்டார்.
அசாம் முதலமைச்சர் சர்பானந்தா சோனோவால் வெள்ள நிவாரணத்திற்காக பணத்தை நன்கொடையாக வழங்கும் முறையீட்டை குறித்து போலி பதிவு ஒன்றை பேஸ்புக் கணக்கில் மாணவன் ஞாயிற்றுக்கிழமை பதிவு செய்ததை அடுத்து, அந்த வெள்ள நிவாரண முறையீடு கடந்தாண்டு செயல்படுத்தப்பட்டது என்றும், இது டிஐபிஆர் வெளியிட்ட செய்திக் குறிப்பு என்றும் எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு போர்ட்டலின் ஆசிரியர் அனிர்பன் ராய் தலைமை செயலாளர் குமார் சஞ்சய் கிருஷ்ணாவுக்கு கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது.
அதன்படி மக்கள் தொடர்பு இயக்குநரகம்(டிஐபிஆர்), மாணவனின் பதிவு போலி என்று அறிவித்தது. அதனையடுத்து அந்த மாணவனை போலீசார் கைது செய்து, தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். ஏற்கனவே மாணவன் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு அதிகாலை திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சை…
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…