வெள்ள நிவாரண முறையீடு குறித்து போலி பேஸ்புக் பதிவை வெளியிட்ட அசாம் பல்கலைக்கழக மாணவர் கைது.!

Default Image

அசாம் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் முதலமைச்சர் வழங்கிய வெள்ள நிவாரண முறையீடு குறித்து போலி பதிவை வெளியிட்டதால் கைது செய்யப்பட்டார்.

கடந்த சில வாரங்களுக்கு மேலாக அசாம் மாநிலத்தில் பெய்து வரும் மழையால் 24 மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கௌகாதி பல்கலைக்கழகத்தில் மாஸ் கம்யூனிகேஷன் மற்றும் ஜர்னலிசத்தின் இரண்டாவது செமஸ்டர் படிக்கும் டிப்ஜோதி கோகோய் என்ற மாணவன் தனது பேஸ்புக் பக்கத்தில் போலி பதிவு ஒன்றை பதிவிட்டதை அடுத்து கைது செய்யப்பட்டார்.

அசாம் முதலமை‌ச்ச‌ர் சர்பானந்தா சோனோவால் வெள்ள நிவாரணத்திற்காக பணத்தை நன்கொடையாக வழங்கும் முறையீட்டை குறித்து போலி பதிவு ஒன்றை பேஸ்புக் கணக்கில் மாணவன் ஞாயிற்றுக்கிழமை பதிவு செய்ததை அடுத்து, அந்த வெள்ள நிவாரண முறையீடு கடந்தாண்டு செயல்படுத்தப்பட்டது என்றும், இது டிஐபிஆர் வெளியிட்ட செய்திக் குறிப்பு என்றும் எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு போர்ட்டலின் ஆசிரியர் அனிர்பன் ராய் தலைமை செயலாளர் குமார் சஞ்சய் கிருஷ்ணாவுக்கு கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது.

அதன்படி மக்கள் தொடர்பு இயக்குநரகம்(டிஐபிஆர்), மாணவனின் பதிவு போலி என்று அறிவித்தது. அதனையடுத்து அந்த மாணவனை போலீசார் கைது செய்து, தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். ஏற்கனவே மாணவன் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்