பில்லி சூனியத்தில் மீது அதிக நம்பிக்கை வைத்த ஒரு தந்தை, தான் பெற்ற மகளையே அதுவும் இரண்டு வயது மகளை ஆற்றில் வீசி கொடூரமாக கொலை செய்த சம்பவம் அசாம் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. இந்த கொடூர செயலுக்கு கடவுள்தான் காரணமென அந்த கொடூர தந்தை வாக்குமூலம் அளித்துள்ளார்.
அசாம் மாநிலத்தில் உள்ள பாஸ்கா எனும் மாவட்டத்தில் உள்ள லாஹாபாரா எனும் கிராமத்தில் பீர்பால் – ஜூனு தம்பதிக்கு பிறந்தவர் தான் ரிஷிகா. இந்த குழந்தைக்கு தற்போது இரண்டு வயதுதான் ஆகிறது. இவரது தந்தை அடிக்கடி உடல்நலம் சரியில்லாமல் இருந்துவந்துள்ளார்.
மாந்திரீகத்தின் மீது நம்பிக்கை கொண்ட இவர், ஒரு மந்திரவாதியிடம் சென்றபோது, இவர் மீது யாரோ பில்லி சூனியம் வைத்துள்ளனர் என அந்த மந்திரவாதி கூறியுள்ளதாக தெரிகிறது. இப்படி இருக்க இவர் சம்பவத்தன்று தன் குழந்தையை அழைத்துச் சென்று, அருகில் உள்ள ஆற்றங்கரையில் குழந்தையை வீசி விட்டு வந்துள்ளார். வீட்டிற்கு வந்ததும் மனைவி குழந்தையை பற்றி கேட்க, மகளை ஆற்றில் வீசியதை அந்த கொடூர தந்தை கூறியுள்ளார்.
பதறிப்போன மனைவி தனது உறவினர்களிடமும், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடமும் கூறி குழந்தையை தேடினார். பின்னர் மீட்பு படையினர் அந்த குழந்தையை சடலமாக ஆற்றங்கரையில் இருந்து மீட்டனர்.
பின்னர் அந்த கொடூர தந்தையை போலீசார் கைது செய்து விசாரிக்கையில், தனக்கு முந்தைய நாள் இரவில் கடவுள் கனவில் வந்து அந்த குழந்தையை கொன்று விடுமாறு கூறினாள் அதனால் நான் கொன்றேன். என வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மந்திரவாதியின் சொல் கேட்டு தான் இவ்வாறு நடந்து கொண்டாரா எனவும் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…
தூத்துக்குடி : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
சென்னை : இன்று பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழிப்பு தினம் சர்வதேச அளவில் கடைபிடிக்கப்படுகிறது. இன்றைய தினத்தில் பெண்கள் பாதுகாப்பு…