சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த அசாம் எம்.எல்.ஏ கைது…!

Default Image

சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த அசாம் மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ ஷர்மன் அலி அகமது கைது செய்யப்பட்டுள்ளார்.

அசாம் மாநிலத்தில் உள்ள டரங் மாவட்டம் சிபஜ்கர் எனும் பகுதியில் ஆக்கிரமித்து வசித்து வரக்கூடிய மக்களை வெளியேற்றும் முயற்சியில் கடந்த மாதம் 23 ஆம் தேதி  போலீசார் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும் ஆக்கிரமிப்புப் பகுதியில் கூடியிருந்த மக்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது. இந்நிலையில் இந்த வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.

மேலும் கடந்த 1979 – 1985 வரை அசாமில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வங்காள தேசத்துக்கு மக்கள் வெளியேறுமாறு போராட்டம் நடைபெற்றது. 1983 ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின் போது சிபஜ்கர் பகுதியில் வசித்து வரும் ஆக்கிரமிப்பாளர்கள் 8 பேரை கொலை செய்ததாக ஆளும் பாஜக அரசு மற்றும் அதன் கூட்டணி தலைவர்கள் சிலர் கூறியுள்ளனர்.

இந்நிலையில், இது குறித்து தற்பொழுது பேசியுள்ள அசாம் மாநிலத்தின்  காங்கிரஸ் எம்.எல்.ஏ ஷர்மன் அலி அகமது அவர்கள், சிபஜ்கர் பகுதியில் வசித்து வந்த சிறுபான்மையினர் மீது அந்த 8 பேரும் தாக்குதல் நடத்திதால், தங்களை தற்காத்துக் கொள்ள தான் அப்பகுதியில் வசித்து வந்த இஸ்லாமிய மக்கள் அந்த எட்டு பேர் மீதும் தாக்குதல் நடத்தினர்.

எனவே 1983 ஆம் ஆண்டு நடைபெற்ற தாக்குதலில் கொல்லப்பட்ட 8 பேரும் தியாகிகள் அல்ல, அவர்கள் கொலைகாரர்கள் என அவர் தெரிவித்துள்ளார். இவரது இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இவர் மீது பாஜக, மாணவர்கள் அமைப்பு உள்ளிட்ட பலர் புகார் அளித்திருந்தனர். இந்த புகாரின் அடிப்படையில் எம்எல்ஏ ஷர்மன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், போலீசார் நேற்று ஷர்மன் அலி அகமதுவை கைது செய்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்