பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் 15 நாட்களுக்கு மூடப்படும் – அசாம் அரசு
அசாம் புதிய கோவிட்-19 வழிகாட்டுதல்கள் வெளியீடு கடைகள் பதியம் 1 மணி வரை திறந்திருக்க உத்தரவு.
இந்தியாவில் கொரோனாவின் 2 வது பேரழிவை ஏற்படுத்தி வருகிறது, இதன்விளைவாக நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கில் மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பரிதாபகரமாக உயிரிழந்து வருகின்றனர்.
இதனால் பல்வேறு மாநிலங்களில் முழுஊரடங்கு மாநில அரசுகள் அமல்படுத்தி வருகின்றனர், அந்த வரிசையில் அசாம் மாநிலத்தில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அம்மாநில அரசு ஊரடங்கை விதித்ததுடன் புதிய கொரோனா நடைமுறைகளையும் வெளியிட்டுள்ளது.
அதன்படி மே 13 காலை 5 மணி முதல் அணைத்து கடைகள், உணவகங்கள் மதியம் 1 மணி வரை திறந்திருக்கும் எனவும் மதியத்திற்கு மேல் ஹோம் டெலிவரி செய்ய அனுமதி வழங்கப்படும் எனவும் கூறியுள்ளது, மேலும் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் மற்றும் வார சந்தைகள் 15 நாட்களுக்கு மூடப்படும் எனவும் இந்த கடுமையான கட்டுப்பாடுகள் மேலதிக உத்தரவு வரும்வரை நடைமுறையில் இருக்கும் எனவும் அசாம் அரசு தெரிவித்துள்ளது.