அசாம் வெள்ளத்தில் 27 லட்சம் விலங்குகள் பாதிப்பு.!
வெள்ளத்தில் 27 லட்சம் விலங்குகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது
அசாம் மாநிலத்தில் கடந்த வாரத்திலிருந்து பெய்து வரும் கனமழை காரணமாக பிரம்மபுத்திரா போன்ற 13 ஆறுகள் மற்றும் அதன் துணை ஆறுகளில் தற்பொழுது வெள்ளம் ஏற்பபட்டுள்ளது இதானால் 24 மாவட்டங்கள் பாதிக்கப்பட்ட நிலயில், 3 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வெள்ளத்தால் 48 ஆயிரம் பேர் வீடு இழந்து தவித்து வருகின்றனர், வெள்ளத்தால் விளைநிலங்கள், மற்றும் சாலைகள், வீடுகள் அனைத்தும் பயங்கரமாக சேதமடைந்துள்ளது, இந்த வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை 649 முகாமில் தங்கவைத்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
மேலும் புகழ்பெற்ற அசாமில் உள்ள காசிரங்கா பூங்காவில் ஏற்பட்ட வெள்ளத்தில், 100க்கும் மேற்பட்ட வனவிலங்குகள் மற்றும் 8 ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்கள்
உயிரிழந்துள்ளது.
இந்நிலையில் காசிரங்கா தேசியப் பூங்காவில் 2,400 ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்கள் இருக்கிறது இந்த ஆண்டு பருவமழையில் இந்த பரந்து விரிந்த தேசியப் பூங்காவில் 85 சதவீதப் பரப்பளவு வெள்ளத்தில் மூழ்கி உள்ளது இதனால், காண்டாமிருகங்கள், முள்ளம்பன்றிகள், எருமைகள், மான்கள் உள்ளிட்ட விலங்குகள் வெள்ளத்தில் மூழ்கியும், வெள்ளத்தில் இருந்து தப்பி ஓடும்போது வாகனங்களில் அடிபட்டும் இருந்துள்ளது.
மேலும் மொத்தமாக வெள்ளத்தில் 27 லட்சம் விலங்குகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.