அசாம் வெள்ளம்: 20 பேர் உயிரிழப்பு..23 மாவட்டங்களில் 9.26 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டனர்.!
அசாமில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் 23 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியது.
கடந்த வாரம் தேமாஜி, உதல்குரி, கோல்பாரா மற்றும் திப்ருகார் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தினால் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த இறப்பு எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது, மே 22-ல் நிலச்சரிவில் மேலும் 23 பேர் கொல்லப்பட்டதாக அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல் தெரிவித்துள்ளனர்.
“வெள்ளத்தால் 9.26 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 68,806 ஹெக்டேர் பயிர் பகுதிகள் வெள்ளத்தால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. 193 நிவாரண முகாம்களில் சுமார் 27,308 பேர் தஞ்சம் புகுந்தனர்” என்று ஒரு அதிகாரி தெரிவித்தார்.
Flood situation in Assam continues to remain grim. Several low-lying areas in Tinsukia were seen submerged as monsoon rains continue unabated . Via Anupam Mishra and Vijay Sharma for @indiatvnews#Assam #Floods #MonsoonRains pic.twitter.com/iCONJJqMOB
— Himanshu Shekhar (@HimaanshuS) June 25, 2020
இதுவரை 2,49,288 வீட்டு விலங்குகள் மற்றும் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட கோழிகள் வெள்ளநீரால் அடித்து செல்லப்பட்டது என தகவல் வெளியானது. இந்த வெள்ளத்தில் இறப்புகள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
தேசிய பேரிடர் படை, அஸ்ஸாம் மாநில பேரிடர் படை வீரர்கள், அங்கு பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கும் கிராம மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கவதற்கும் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். இதற்கிடையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று அசாம் வெள்ள நிலைமை குறித்து முதலமைச்சர் சர்பானந்தா சோனோவலுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விவாதித்து, பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு சம்பவங்கள் குறித்து விசாரித்தார்.