பாஜகவில் இணைய உள்ள காங்கிரஸ் எம்எல்ஏ அஜந்தா நியோக் ?

அசாம் மாநிலத்திற்கு மத்திய உள்துறை அமித்ஷா டிசம்பர் 26ஆம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏ அஜந்தா நியோக் பாஜகவில் சேர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பல்வேறு மாநிலங்களுக்கு பாஜகவின் முன்னாள் தேசிய தலைவர்களில் ஒருவரும்,மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.அந்த வகையில் வருகின்ற 26 ஆம் தேதி அசாம் மாநிலத்திற்கு அமித்ஷா சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அம் மாநில பாஜக தலைவர் நுமல் மொமின் தகவல் தெரிவித்துள்ளார்.மேலும் மற்ற கட்சியினர் பாஜகவில் சேர உள்ளதாக தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிலர் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அதாவது காங்கிரஸ் எம்எல்ஏ அஜந்தா நியோக் பாஜகவில் சேர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அண்மையில் அசாம் முதலமைச்சர் மற்றும் நிதியமைச்சர் உள்ளிட்டோரை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து! 3 பேர் உயிரிழப்பு!
April 26, 2025
திறந்தவெளி வாகனத்தில் விஜய்., ஸ்தம்பித்த கோவை விமான நிலையம்!
April 26, 2025