டோக்கியோ ஒலிம்பிக்கில் குத்துச்சண்டையில் வெண்கல பதக்கம் வென்ற லவ்லினாவிற்கு அசாம் மாநில முதல்வர் டிஎஸ்பி பதவி வழங்கி கௌரவித்துள்ளார்.
டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் குத்துச்சண்டை 69 கிலோ எடைப்பிரிவின் போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா வெண்கலப் பதக்கத்தை வெற்றிகொண்டார். இதனால் இவருக்கு பரிசுத்தொகை குவிந்து வருகிறது.
இந்நிலையில் அசாம் மாநிலத்தை சேர்ந்த இவருக்கு அம்மாநில முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா ரூ.1 கோடி பரிசுத்தொகையும், மாநில காவல்துறையில் டிஎஸ்பி பதவியையும் இன்று வழங்கியுள்ளார். அசாம் மாநில முதல்வர் ஒலிம்பிக் வீராங்கனை லவ்லினாவிற்கு அறிவித்துள்ள பரிசுகள்:
அசாமில் முதன்முறையாக ஒலிம்பிக் பதக்கம் வென்று கொடுத்த லவ்லினாவிற்கு 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வெல்வதை கனவாக கொண்டுள்ளார். இதனால் அதுவரை இவருக்கு மாதந்தோறும் ரூ.1 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும்.
மேலும், குவாஹட்டியில் உள்ள ஒரு சாலைக்கு லவ்லினாவின் பெயர் சூட்டப்படும். இதனை அடுத்து, லவ்லினா பதக்கம் வெல்ல காரணமாக இருந்த இவரது பயிற்சியாளர்களான பிரஷந்தா தாஸ், பதும் பரௌவா, சந்தியா குருங், ரஃபேல் கமவஸ்கா ஆகியோருக்கு அசாம் சார்பாக ரூ.10 லட்சம் வழங்கி அவர்கள் கௌரவிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.
மேலும், லவ்லினா வசிக்கும் கிராமத்தில் குத்துச்சண்டை அகாடமி வசதியோடு விளையாட்டு வளாகம் அமைக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஜார்ஜ் பார்க் : இந்தியா - தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டியானது இன்று நடைபெற்றது. இந்த போட்டியில்…
டெல்லி : உடல் நலக்குறைவால் நடிகர் டெல்லி கணேஷ் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருக்கும் போதே உயிரிழந்தார். அவரது மறைவு…
பலுசிஸ்தான் : நேற்று காலை 9 மணி அளவில் பலுசிஸ்தானில் அமைந்துள்ள குவெட்டா ரயில் நிலையத்தில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம்…
சென்னை : புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் இடம்பெற்று இருந்த "ஓ சொல்றியா மாமா" பாடல் மிகப்பெரிய ஹிட்டாகி படத்தின்…
மும்பை : பொதுவாகவே, சினிமா துறையிலும் சரி, விளையாட்டுத் துறைகளிலும் சரி சில பிரபலங்கள் தங்களுடைய குழந்தைகளின் முகத்தை ஊடகத்திற்கு…
சென்னை : வரும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையிலும், அந்த தேர்தலில் தேமுதிக கட்சியின் கட்டமைப்பைப் மேம்பபடுத்துவது தொடர்பாக…