அசாம் மாநிலத்தின் தற்போதைய முதல்வர் சர்பானந்தா சோனோவால் தனது ராஜினாமா கடிதத்தை அசாம் ஆளுநர் ஜெகதீஷ் முகியிடம் கொடுத்துள்ளார்
சமீபத்தில் தமிழ்நாடு, அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில், 126 தொகுதிகளை உள்ளடக்கிய அசாம் மாநிலத்தில் தேர்தலில் 75 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சியை கைப்பற்றியது.
இதில், 60 தொகுதிகளில் தனித்து வெற்றி பெற்ற பாஜக முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமலே தேர்தலை எதிர்கொண்டது. இதனால், முதல்வர் யார் என்பது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. முதல்வர் போட்டியாளர்களாக முன்னாள் முதல்வர் சர்பானந்தா சோனோவால் மற்றும் முன்னாள் அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா உள்ளனர்.
இதைத்தொடர்ந்து, பாஜக தலைமை இருவரையும் அழைத்து நேற்று ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டம் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இல்லத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர்.
ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களிம் பேசிய ஹிமந்தா பிஸ்வா சர்மா நாளை பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்திற்கு பிறகு பதில் தெரியும் என தெரிவித்தார். இந்நிலையில், அசாம் மாநிலத்தின் தற்போதைய முதல்வர் சர்பானந்தா சோனோவால் தனது ராஜினாமா கடிதத்தை அசாம் ஆளுநர் ஜெகதீஷ் முகியிடம் கொடுத்துள்ளார்.
ஐதராபாத்: தெலுங்கு திரையுலகின் மிகப்பெரிய நட்சத்திரங்களான நாக சைதன்யா - நடிகை சோபிதாவின் திருமணம் இன்று பிரமாண்டமாக நடந்து முடிந்தது.…
புதுச்சேரி: ஃபெஞ்சல் புயலால் பெருமழை பாதிப்பில் சிக்கிய புதுச்சேரியில் அதிகம் பாதிக்கப்பட்ட கிருஷ்ணா நகர், வெங்கட்டா நகர் உள்ளிட்ட இடங்களில்…
கடலூர்: பெஞ்சல் புயல் கனமழை காரணமாக வட தமிழக மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது. குறிப்பாக, விழுப்புரம் மாவட்டத்தில் இன்னும் வெள்ள…
சென்னை: வடசென்னை உயர்கல்வித்துறை சார்பில் சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில், ரூ.1,383 கோடி மதிப்பீட்டில் 79 புதிய திட்டப் பணிகளை…
சென்னை: ஃபெஞ்சல் புயல், கனமழை வெள்ளம் காரணமாக விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் ஆகிய மாவட்டங்கள் கடும் பாதிப்புகளுக்குள்ளாகி இருக்கிறது. அதேபோல்,…
விழுப்புரம் : பெஞ்சள் புயல், வெள்ளம் காரணமாக முதல் மாவட்டமாக விழுப்புரம் மாவட்டத்திற்கு பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.…