ராகுல்காந்தி மன்னிப்பு கேட்டிருந்தால் தண்டனை கிடைத்திருக்காது.! அசாம் முதல்வர் கருத்து.!
ராகுல்காந்தி மன்னிப்பு கேட்டிருந்தால் தண்டனை கிடைத்திருக்காது என அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கருத்து தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி , பிரதமர் மோடி பெயர் குறித்து அவதூறு விளைவிக்கும் விதமாக பேசியாக கூறி, அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை அடுத்து ராகுல்காந்தி எம்பி பதவியில் இருந்தும் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.
காங்கிரஸ் போராட்டம் :
இந்த தகுதிநீக்க நடவடிக்கையானது காங்கிரஸ் கட்சி மட்டுமின்றி மற்ற எதிர்க்கட்சியினர் மத்தியிலும் எதிர்ப்பை உண்டாக்கியது காங்கிரஸ் கட்சியினர் நாடுமுழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
யாருக்கும் நேரமில்லை :
இதுகுறித்து பாஜகவை சேர்ந்த அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், எல்லோரும் அவரவர் வேலையில் மும்முரமாக இருக்கின்றனர். ராகுல்காந்தி தகுதிநீக்கம் பற்றி பேசுவதற்கு இங்கு யாரும் நேரமில்லை. என்று கூறினார்.
மன்னிப்பு :
மேலும், 2019 ஆம் ஆண்டு அவதூறு வழக்கில் ‘மோடியின் குடும்பப்பெயர்’ பற்றி பேசியதற்காக ராகுல் தண்டனை பெற்றதை தொடர்ந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். ராகுல் மன்னிப்பு கேட்டிருந்தால் அவருக்கு தண்டனை கிடைத்திருக்காது என்றும் அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறினார்.
,