பாப்புலர் பிராண்ட்ஆஃப் இந்தியா இயக்கத்தை தடை செய்ய வேண்டும்.! அசாம் முதல்வர் அதிரடி.!
நாடுமுழுவதும் என்.ஐ.ஏ நடத்திய சோதனையில் அசாம் மாநிலத்தில் 11 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளது. அதனால் பாப்புலர் பிராண்ட் அமைப்பை தடை செய்ய வேண்டும் என அசாம் மாநில முதலவர் ஷர்மா தெரிவித்துள்ளார்.
கடந்த வியாழன் அன்று தேசிய புலனாய்வு அமைப்பு, நாடு முழுவதும் உள்ள பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அலுவலகங்கள் மற்றும் எஸ்.டி.பி.ஐ அலுவலகங்களில் சோதனை நடைபெற்றது. இதில் முக்கிய நிர்வாகிகள் 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் என்.ஐ.ஏ விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சோதனை சம்பவம் குறித்து அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கருத்துக்களை கூறியுள்ளார். அவர் கூறியதாவது, ‘ பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்வதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை (பிஎஃப்ஐ) இந்தியாவில் தடை செய்யுவேண்டும்’ என கூறினார்.
மேலும், ‘ அசாமில் இதுவரை 11 PFI சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். PFI ஐ தடை செய்ய வேண்டும் என்று மத்திய அரசிடம் தொடர்ந்து அசாம் அரசு கேட்டு கொண்டிருக்கிறது. அந்த அமைப்பு தடை செய்யப்படும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
உலக பயங்கரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ் மற்றும் அல்கொய்தா ஆகிய அமைப்பின் தூண்டுதலின் பெயரில் அதற்காக சில நபர்களை தேர்ந்தெடுத்து ஊக்குவிக்கும் ஒரு சுற்றுச்சூழல் அமைப்பை PFI உருவாக்கியுள்ளது என்று உளவுத்துறை எங்களிடம் எச்சரித்துள்ளன. என முதல்வர் சர்மா கூறினார்.