வேலைவாய்ப்பின்மை குறித்து கேள்வி எழுப்பினால் அரசருக்கு கோபம் மட்டும் வருகிறது – ராகுல் காந்தி
22 கோடி இளைஞர்கள் 8 வருடமாக அரசு பணிகளுக்காக வரிசையில் காத்துக்கிடக்கின்றனர். வெறும் 7.22 லட்சம் பேருக்குதான் வேலை கிடைத்து உள்ளது என ராகுல் காந்தி ட்வீட்.
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்கள், பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசின் கொள்கைகள் குறித்தும் தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்து கருத்துக்கள் பதிவிடுவது வழக்கம்.
அந்த வகையில், ராகுல் காந்தி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ’22 கோடி இளைஞர்கள் 8 வருடமாக அரசு பணிகளுக்காக வரிசையில் காத்துக்கிடக்கின்றனர். வெறும் 7.22 லட்சம் பேருக்குதான் வேலை கிடைத்து உள்ளது. அதாவது ஆயிரம் பேரில் வெறும் 3 பேருக்குதான் வேலை கிடைத்து உள்ளது. வேலைவாய்ப்பின்மை குறித்து கேள்வி எழுப்பினால் அரசருக்கு கோபம் மட்டும் வருகிறது.
உண்மை என்னவென்றால் வேலை வாய்ப்பு என்பது வெறும் வேலை கொடுப்பது மட்டும் அல்ல. இளைஞர்கள் நம் நாட்டின் சொத்துக்கள், ஆனால் பாஜக அரசு அவர்களை கடனாக காட்டுகிறது.’ என பதிவிட்டுள்ளார்.
22 करोड़ युवा, 8 सालों में सरकारी नौकरियों के लिए कतार में लगे, नौकरी मिली 7.22 लाख को, यानी 1000 में से सिर्फ़ 3 को।
बेरोज़गारी पर सवाल पूछने पर राजा को गुस्सा आता है। सच तो ये है- रोज़गार देना इनके बस की बात नहीं।
युवा देश का ‘Asset’ हैं, भाजपा उन्हें ‘Liability’ दिखा रही है।
— Rahul Gandhi (@RahulGandhi) July 28, 2022