சிறந்த நிர்வாகத்துடன் செயல்படும் நகரங்களில் புனேவிற்கு முதல் இடம், நம்ம சென்னை 19-வது இடம்…!!
ஏ.எஸ்.ஐ.சி.எஸ்(ASICS) எனப்படும் தனியார் அமைப்பு இந்த ஆண்டு இந்தியாவில் சிறந்த நிர்வாகத்துடன் செயல்படும் நகரங்கள் குறித்த ஆய்வை இந்தியா முழுவதும் மேற்கொண்டுள்ளது.
இந்த ஆய்வில் மகாராஷ்டிராவின் புனே நகரம் 10-க்கு 5.1 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது.
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தா, கேரளாவின் திருவனந்தபுரம், ஒடிசாவின் புவனேஷ்வர் நகரம் ஆகியவை முறையே 2,3 மற்றும் 4-வது இடங்களை பெற்றுள்ளன. இப்பட்டியலில் நமது தமிழகத்தின் தலைநகர் சென்னை 3.3 மதிப்பெண்களுடன் 19-வது இடத்திலும், 3 மதிப்பெண்களுடன் பெங்களூரு கடைசி இடத்திலும் உள்ளது.