இந்தியாவுக்கு உதவிய ஆசிய வளர்ச்சி வங்கி.! ரூ.11,387 கோடி கடனுதவி.!
இந்தியாவுக்கு உதவும் வகையில் ரூ.11,387 கோடி கடனுதவி வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவில் கொரோனவால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க மற்றும் கொரோனா தடுப்பு பணிக்கு உதவும் வகையில் ஆசிய வளர்ச்சி வங்கி ரூ.11,387 கோடி கடனுதவி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்து வருவதால் 2 ம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து மே 3 ஆம் தேதியுடன் நிறைவடைய இருக்கும் ஊரடங்கு மேலும் நீடிக்கப்படுமா என்று மக்களிடம் கேள்வி எழுந்துள்ளது. அதனை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். இதனிடையே கொரோனா வைரசால் நாடு முழுவதும் இதுவரை 29,974 பேர் பாதிக்கப்பட்டு, 937 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே கொரோனா தடுப்பு பணியை மேற்கொள்ள தங்களால் முடிந்த நிதியை அளிக்கலாம் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார். அதன்படி, பல்வேறு துறைகளை சார்ந்தவர்கள் தங்களால் ஈன்ற நிதியை அளித்து வருகிறார்கள். இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா தடுப்பு பணிக்கு உதவும் வகையில் ரூ.11,387 கோடி வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி கடனுதவி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.