ஆசிரம மேலாளர் ரஞ்சித் சிங் கொலை வழக்கில் குர்மீத் ராம் ரஹீம் தான் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வெளியாகியுள்ளது.
ஹரியானா மாநிலம் சிர்சாவில் தேரா சச்சா சவுதா எனும் ஆசிரமத்தில் அதன் தலைவர் குர்மீத் ராம் ரஹிம் சிங் என்பவர் இரண்டு துறவி பெண்களை பலாத்காரம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 2002ஆம் ஆண்டு இது குறித்த உண்மையை பத்திரிக்கையில் புலனாய்வு செய்து வெளியிட்ட சத்ரபதி என்பவர் 2002 ஆம் ஆண்டு சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
இதனை அடுத்து சத்ரபதி கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹிம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், கடந்த 2002 ஆம் ஆண்டே தேரா சச்சா ஆசிரமத்தின் மேலாளர் ரஞ்சித் சிங் என்பவரும் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். ஆசிரமத்தில் நடக்கக்கூடிய முறைகேடுகள் குறித்து எழுத படக்கூடிய பத்திரிகையான பூரா சச் என்பதன் பின்னணியில் ரஞ்சித் சிங் இருந்ததால் தான் அவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இது தொடர்பான வழக்கில் குர்மீத் ராம், கிருஷ்ணலால், ஜஸ்பீர் சிங், சப்தில் சிங், இந்திரசேனா உட்பட பலர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதன்படி ரஞ்சித் சிங்கை கொன்ற வழக்கில் ராம் ரஹீம் மற்றும் நான்கு பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் இவர்களுக்கான தண்டனை என்ன என்பது குறித்து அக்டோபர் 12-ஆம் தேதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான மார்ச் மாத ஊதியம்ஏப்ரல் 2 ஆம் தேதி ஊதியம் வழங்கப்படும் என தமிழ்நாடு…
சென்னை : டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்றிரவு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் நேரில் சந்தித்தார். கூட்டணியில் இருந்து…
கொல்கத்தா : நைட் ரைடர்ஸ் (KKR) அணியைச் சேர்ந்த இளம் ஆல்-ரவுண்டர் ரமன்தீப் சிங். இவரை இந்த ஆண்டு கொல்கத்தா அணி…
சென்னை : மத்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் 2025-2030 ஆண்டுகளுக்கான புதிய ஒப்பந்தத்தை அண்மையில் அறிவித்துள்ளன. அதன்படி, டேங்கர்…
சென்னை : இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் (48) மாரடைப்பால் நேற்று காலமானார். இவருடைய மறைவு திரைத்துறையை உலுக்கியுள்ள நிலையில்,…
அகமதாபாத் : நேற்று (மார்ச் 25) நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தன்னுடைய முதல் ஐபிஎல்…